திருச்சி வயலூர் சாலை கீதா நகர் பேருந்து நிறுத்தம் பயணிகள் நிழற்குடை மிகவும் சீரழிந்த நிலையில் நாற்காலிகள் உடைபட்டும் மின்விளக்கு வசதியின்றி மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த பேருந்து நிறுத்த நிழற்குடையை இரவு நேரத்தில் மின் விளக்கு வசதி இல்லாததால் பல பேர் அமர்ந்து மது அருந்துவது, படுத்து தூங்குவது, குடித்துவிட்டு அங்கேயே

கிடப்பது என மோசமான நிலையில் இருக்கிறது. பொதுமக்கள் அமர்வதற்கு போதுமான நாற்காலி வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பலரும் நிழற்குடையில் நின்று கொண்டே சிரமப்படுகின்றனர் . உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் பேருந்து நிழற்குடை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் .

இப்படிக்கு
தோழர் திருச்சி செழியன்
மாநிலச் செயலாளர் மக்கள் அதிகாரம் தமிழ்நாடு – புதுவை

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments