திருச்சியி சாலையில் இயங்கும் புறநகர் பேருந்துகளை பஞ்சப்பூர் நிலையத்திற்கு மாற்ற ஆட்சியர் அருள் புரிவாரா

திருச்சி மாநகராட்சி கடந்த 25ஆண்டுகளாகியும் சாலையில் பேருந்து நிலையம் தமிழ்நாட்டில் இல்லை இந்தியாவிலேயே உள்ள ஒரே பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம். சத்திரம் பேருந்து நிலையத்திற்கு நகர பேருந்துகள் மட்டுமல்லாமல் புறநகர் பேருந்துகள் கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மார்க்கங்களில் செல்லும் பேருந்துகள் அங்கே நிறுத்தப்படுகின்றன, அங்கு வரும் பயணிகளுக்கு குடிநீர், கழிப்பிட வசதி எதுவும் கிடையாது. வெயில்,மழை

காலங்களில் சாலையில் தான் பயணிகள் நின்று கொண்டிருக்க வேண்டிய கொடுமை. இந்த வேதனையை கால் நூற்றாண்டாக பயணிகள்,பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆட்சியாளர்கள் தொடர்ந்து மாறி மாறி வந்தாலும் தற்பொழுது புதிய ஆட்சி வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் திருச்சி மாவட்டத்திற்கு புதிய துடிப்பான மாவட்ட ஆட்சியரும் வந்துள்ளார். இந்த பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ள புறநகர் பேருந்துகளை பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு மாற்றினால் பயணிகள் பொதுமக்களுக்கு பேருதவியாக

இருக்கும்.புறநகர் பேருந்துகள் பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் இங்கு வரும் பேருந்துகளில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் கூட அவசர அடிப்படை தேவைகளுக்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகிவிட்டனர். இதனை கருத்தில் கொண்டு நகர பேருந்துகள் வந்து செல்வதற்கு சத்திரம் பேருந்து நிலையம் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. அதில் பேருந்துகள் நின்றால் போதும் என பயணிகள் திருச்சி வாசிகளும் தெரிவிக்கின்றனர். சாலையில் பேருந்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் விபத்துக்கள் என தொடர்ந்து தினமும் நடந்து கொண்டே இருக்கிறது. அந்தப் பகுதி காலை ,மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

இது மட்டுமில்லாமல் அண்ணா சிலை பகுதியில் கடப்பதற்கு 30 நிமிடங்கள் கூட ஆகிறது. இந்த நிலையை மாற்ற புதிய ஆட்சியாளர்களும் புதிய ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியை திருச்சி பொதுஜனம் வைத்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments