Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பிரபல ரவுடி வெட்டிக்கொலை: கள்ளக்காதலி தம்பி உட்பட 7 பேர் கைது!

திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மகபூ பாஷா இவரது மகன் பாதுஷா (24) பிரபல ரவுடியாவான் இந்த நிலையில் 7ம் தேதி நள்ளிரவு திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் செக் போஸ்ட் காமராஜர் நகர் வினோபாஜி தெரு பகுதியில் மர்ம நபர்கள் பாதுஷாவை வெட்டிபடுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

இக்கொலையை திருவெறும்பூர்அவரது மனைவி பாத்திமா பீவி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அரியமங்கலம் காந்திஜி நகரை சேர்ந்த சூர்யாவின் அக்கா பவானி என்பவரோடு பாதுஷா கள்ள உறவில் இருந்து வந்ததால் சூர்யா விற்கும் பாதுகாவிற்கும் இடையே முன்பகை இருந்து வந்ததாகவும் இந்த நிலையில் பாதுஷா சூர்யாவை கொலை செய்ய கூடும் என அஞ்சியதால் சூர்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து பாதுஷாவை வெட்டு படுகொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அரியமங்கலம் காந்திஜி நகரை சேர்ந்த மலையப்பன் மகன் சூர்யா (22), அரியமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்த
கரிகாலன் மகன் குமார் (எ)சந்திரகுமார் ( 26 )ஜீவானந்தம் நகரை சேர்ந்த இளங்கோவன் மகன் பிரசாத் (29)ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை செய்து வந்தனர். தீபக் (20) மணிகண்டன் (25) மற்றும் சிறுவன் ஒருவன் என மேலும் 3 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி சிறுவனை மட்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மற்றவர்களை திருச்சி மத்திய சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision


Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *