Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சோபனபுரத்தில் விவசாய கடன் தள்ளுபடி கோரி ஆர்பாட்டம்

துறையூர் அருகே சோபனபுரத்தில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் சோமனபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகள் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சோபனபுரம் வேளாண் கூட்டுறவு சங்கம் முன்பாக சோபனபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி சிறு குறு விவசாயிகளுக்கு கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்யவும், பெரும் விவசாயிகளுக்கு 50% தள்ளுபடி செய்யவும் கூறியது போல் நிறைவேற்றாததை கண்டித்தும் உடனடியாக நிறைவேற்ற

வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசிற்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர், தொடர்ந்து கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் கடனை தள்ளுபடி செய்யும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர், உப்பிலியபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *