Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நவல்பட்டு மின் மயான பழுதால் பொதுமக்கள் அவதி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் 2021 மற்றும் 2022 நிதியாண்டு எஸ் சி பி ஏ ஆர் திட்டத்தின் கீழ் ரூ2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்ட எல்பிஜி கேஸ் எரிவாயு மயான தகன மேடை பழுதடைந்துள்ளதால் இறந்தவர்களை எரிப்பதற்கு முடியாமல் கடந்த ஒரு ஆண்டு காலமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு, அண்ணா நகர், சோழமாதேவி, சூரியூர், கும்பக்குடி, பூலாங்குடி, துப்பாக்கி தொழிற்சாலை,போலீஸ்காலனி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நோய்வாய்ப்பட்டோ அல்லது இயற்கையாகவோ விபத்தின் மூலமாகவும் மரணம் அடைந்தால் அவர்களை எரிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் சுடுகாடு மற்றும் இடுகாடுகள் இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் அவசர நிலையின் கருதி உடனடியாக மின் மயானத்தில் எரித்து ஒரு நாளில் சடங்குகளை முடிப்பதற்கு பொதுமக்கள் விரும்புகின்றனர்.

இதனால் தங்கள் குடும்பத்தில் இறப்பவர்களை மின் மயானத்தில் எரிப்பதற்கு திருச்சி மாநகர் பகுதியில் உள்ள ஓயாமரி மின் மயானத்திற்கு வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.இது பல கிலோமீட்டர் தூரம் மேலும் அங்கு மின் மயானத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மனித உடல்களை எரிக்க முடியும் என்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானர்கள்இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பகுதியில் மின் மயானம் அமைத்து தரவேண்டும் என முந்தைய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த 2021 மற்றும் 2022-ம் நிதி ஆண்டில் எஸ் சி பி ஏ ஆர் திட்டத்தின் கீழ் ரூ 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மின் மயானம் கட்டும்பணி நடைபெற்றது.

அப்படி கட்டி முடிக்கப்பட்ட மின் மயானம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திறக்கப்பட்டது.இதனால் நவல்பட்டு அண்ணா நகரை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது நீண்ட நாள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டதாக இருந்தனர்.இந்த நிலையில் நவல்பட்டு ,அண்ணா நகரை சுற்றியுள்ள போலீஸ் காலனி, நவல்பட்டு, அண்ணா நகர், கும்பக்குடி, சூரியூர், பூலாங்குடி, சோழமாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை திருச்சி ஓயாமரியில் உள்ள மின் மயானதிற்கு கொண்டு செல்லாமல் இந்த பகுதியில் உள்ள மின்மயானத்தில் எரித்து தங்களது உறவினர்களுக்கு இறுதி சடங்கை நிகழ்த்தினார்.

இந்த நிலையில் நவல்பட்டு ,அண்ணா நகரில் உள்ள மின் மயானம் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு பழுதடைந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சரி செய்து கொடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது.இதுகுறித்து திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தனர் .ஆனால் அவர்களும் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.இதனால் நவல்பட்டு, அண்ணா நகர் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் திருச்சி ஓயாமரியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.இதனால் அவர்களுக்கு பண விரயம் நேர விரையம் மற்றும் அங்கு தங்களது உறவினர்களை மின்மயானதில் எரிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதற்கு இடையில் புதிய ஆட்சி வந்ததால் அவர்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட

 

அதிகாரிகளிடம்தொடர்ந்துபழுதடைந்துள்ள மின் மையத்தில் உள்ள பொருட்களை சரி செய்வதற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்து மதிப்பீடு செய்து நிதி கேட்டு உள்ளதாகவும் அவர்கள் அரசு ஒதுக்கிய பிறகுதான் நவல்பட்டு அண்ணா நகரில் பழுதடைந்துள்ள மின் மயானத்தை சரி செய்ய முடியும் அதுவரை முடியாது என்றும் கூறி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

 

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படை நவல்பட்டு, அண்ணா நகர் பகுதியில் பழுதடைந்துள்ள மின் மயானத்தை சரி செய்து அண்ணா நகர் சுற்றுவட்ட பகுதிகளில் இறப்பவர்களின் உடலை மின்மயானத்தில் எரி ஊட்டுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *