திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரத்திக் தயாள், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருவெறும்பூரில் 2026-ஆம் ஆண்டின் நேரடி சேர்க்கை (Spot Admission) 15.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெறும்.
நேரடி சேர்க்கைக்கு வரும் 8-ஆவது மற்றும் 10-ஆவது தேர்ச்சி பெற்ற மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கைபேசி எண், E-mail Id, ஆதார் கார்டு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். ஓர் ஆண்டு பிரிவிற்கு ரூ.235/- மற்றும் இரண்டு ஆண்டு பிரிவிற்கு ரூ.245/- சேர்க்கை கட்டணமாக செலுத்த வேண்டும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள், விலையில்லா சீருடை, தையற்கூலி, வரைபடக்கருவிகள், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணி, விலையில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் ஒவ்வொரு பயிற்சியாளர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- வழங்கப்படும்.

மேலும், பயிற்சி முடித்த பின் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும். தனியார் நிறுவனங்களில் OJT பயிற்சி வழங்கப்படும். தேவையான தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9042411348.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரத்திக் தயாள், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு:
உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav





Comments