Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அறிக்கை!

இன்று 19/6/2026 திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு மூன்றாவது முறையாக இ- மெயிலில் பகிரங்க வெடிகுண்டு மிரட்டல். இதனால் பொதுமக்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அனைவரும் அச்சத்தில் உள்ளனர் திருச்சி மாவட்ட வெடிகுண்டு நிபுணர்களின் உதவி ஆய்வாளர் அருவானந்தம்  தலைமையில் ஒன்பது பேர் கொண்ட வெடிகுண்டு

நிபுணர்கள் குழு இன்று நான்கு மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர் உடன் நீதிமன்ற ஊழியர்கள் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் ஆகியோர் உடன் இருந்தனர் பிறகு வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்ற வளாகத்தில் அனைத்து இடமும் தேடிய பிறகு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை என்று ஒப்புதல் கொடுத்து சென்றனர். மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் கண்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளரை அழைத்து யார் இந்த இமெயிலை அனுப்புகிறார்கள் என்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

காவல்துறைக்கு எங்களின் அன்பான வேண்டுகோள் இரண்டு முறை இமெயில் வந்தும் அது எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்காமல் இருப்பது ஏன் மேலும் இது ஒரு நீதிமன்றத்துக்கு வரும் ஒரு வழக்காடியின் செயலாக இருக்கலாம் அல்லது உண்மையாக மிரட்டல் ஆகவும் இருக்கலாம் இதை அலட்சிய படுத்தாமல் மேலும் இது திரும்பவும் தொடராமல் இருக்க திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் இதை கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கின்றார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *