Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்டத்தில் டாம்கோ, டாப்செட்கோ கடனுதவி லோன் மேளா – ஜூலை 1 முதல் 15 வரை

டாம்கோ, டாப்செட்கோ கடனுதவித் திட்டங்களுக்கான லோன்மேளா நடைபெறவுள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரதீப் தாயள்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனி நபர் கடன் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடன் திட்டம், ஆட்டோ கடன் திட்டம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மானியக் கடன்* ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் லோன் மேளாக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கீழ்கண்ட விவரப்படி நடைபெறவுள்ளது.

லோன் மேளா நடைபெறும் நாட்கள் & இடங்கள்:

01.07.2026 – திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இராமலிங்க நகர் கிளை

02.07.2026 – திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஆண்டாள் வீதி கிளை

03.07.2026 – ஸ்ரீரங்கம் வட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஸ்ரீரங்கம் கிளை

06.07.2026- திருவெறும்பூர், மேலகண்டார் கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

07.07.2026 – மணப்பாறை வட்டம், மலையடிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

08.07.2026 – வையம்பட்டி வட்டம், கருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

09.07.2026 – மணப்பாறை வட்டம், புத்தாநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

10.07.2026 – புள்ளம்பாடி வட்டம், புஞ்சை சங்கேந்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

13.07.2026 – இலால்குடி வட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இலால்குடி கிளை

14.07.2026- முசிறி வட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முசிறி கிளை

15.07.2026 – துறையூர் வட்டம், சிங்களாந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

யார் விண்ணப்பிக்கலாம்:

டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் இன மக்களும், டாப்செட்கோ கடனுதவி திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களும் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

இத்திட்டம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்படும். புதிய தொழில், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி பெறவும் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சாதி சான்று நகல், வருமான சான்று நகல், இருப்பிட சான்று நகல். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விவசாயிகளுக்கான நீர்ப்பாசன கடன் பெற விண்ணப்பதாரர் சிறு குறு விவசாயி என்பதற்கான சான்றினை சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடமிருந்து பெற்று வழங்க வேண்டும்.

 

கூடுதல் விவரங்களுக்கு: இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி அலுவலர்களை அணுகலாம்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மக்கள் மேற்படி லோன் மேளாக்களில் கலந்து கொண்டு கடன் திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரதீப் தாயள்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு:

உதவி இயக்குநர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

 

 

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *