Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மண்ணச்சநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் – 2026 நேரடி சேர்கை தொடக்கம்

மண்ணச்சநல்லூர் – அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ / மாணவியர் 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரதீப் தாயள்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கு மட்டும் துவங்கப்பட்ட மண்ணச்சநல்லூர் – அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ / மாணவியர் 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

மண்ணச்சநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ / மாணவியர் விடுதி வசதியுடன் கூடிய *இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன், டெக்னீசியன் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் & ரிப்பேர், எலக்ட்ரீசியன் பவர் டிஸ்ட்ரிபியூஷன், வெல்டர், இன்ஜினியர் டிசைன் & டெக்னோலஜி மற்றும் ரெஃப்ரிஜிரேஷன் & ஏர் கண்டிஷனர் டெக்னீசியன் உள்ளிட்ட ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளுக்கு நடப்பு ஆண்டுக்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

இத்தொழிற்பயிற்சி நிலையமானது முற்றிலும் கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கு மட்டுமே என்பதால் 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகள் / சார்ந்திருப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்களை  9486274283, 8220155999, 9092397407, 9895792504, 8220398276 தொடர்புகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரதீப் தாயள்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு:

உதவி இயக்குநர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *