திருச்சியில் பல ஆண்டுகால புளியமர கிளைகள் வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

திருச்சி லால்குடி வட்டம் பகுதியில் நம்பர் ஒன் டோல்கேட் இருந்து லால்குடி அனைத்து கிராமப்புற சாலை ஓரங்களில் இருக்கும் பழமை வாய்ந்த இன்னும் கம்பீரமாக நிற்கும் புளிய மரங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மரம் பழுதாகி விழுந்து விபத்து ஏற்பட்டுத்துகிறது. மாவட்ட நிர்வாகம் பழுதான மரங்களை மட்டும் நீக்க வேண்டும் என்று உத்தரவின் பேரில் நல்லா இருக்கும் புளிய மரங்களை மட்டும் குறி வைத்து பெரும் கிளைகளை அறுத்து அதை விற்பனை செய்வதாக லால்குடி

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது சமூக ஆர்வலர் குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.ஓராண்டு காலமாக ஏதோ ஒரு காரணங்களை சொல்லி வாளாடி மாந்துறை நகர் ரோடு காட்டூர் கோமக்குடி அன்பில் கொப்பாவழி ஆகிய பகுதிகளில் இருக்கும் புளிய மரங்களின் கிளைகளை அறுத்து அதில் கமிஷன் பெற்றுக் கொண்டு யாரும் கண்டு கொள்வதில்லை என கூறப்படுகிறது. பழமை வாய்ந்த புளிய மரங்களை அழித்து வரும் லால்குடி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்துள்ளனர்.. ஒரு மரம் கூட நடுவதற்கு லால்குடி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பல ஆண்டு புளிய மரங்களை அழித்து வருபவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்.தமிழக முதல்வர் கவனத்திற்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது. லால்குடி பகுதியில் இருக்கும் புளிய மரங்களை அப்பகுதி மக்கள் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் முகநூல் பக்கம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments