Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு ஜூன் 21-ல் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாள் ஜூன் 22 கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம், மணப்பாறை, இலால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, திருச்சிராப்பள்ளிமேற்கு,

 

திருச்சிராப்பள்ளி கிழக்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் 21.06.2026 அன்று நடத்தப்படும் மாபெரும் இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான திரு.சி.ரமேஷ்அவர்கள்

கேட்டுக்கொண்டுளளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் ஜூன் 22 கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம், மணப்பாறை, இலால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, திருச்சிராப்பள்ளிமேற்கு, திருச்சிராப்பள்ளி கிழக்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் 21.06.2026 அன்று நடத்தப்படும் மாபெரும் இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான திரு.சி.ரமேஷ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இச்சிறப்பு முகாம்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக நடத்தப்பட உள்ளன.

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவர்களைக் கொண்டு மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி சாலையில் அமைந்துள்ள இலக்குமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், இலால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலால்குடி நெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் ஜமீன்தார்

மேல்நிலைப்பள்ளியிலும்,மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராசாம்பாளையம் ஸ்ரீ சரவணபவ வித்யாலயாமெட்ரிக்

மேல்நிலைப்பள்ளியிலம், முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி ஸ்ரீ ஜெயேந்திரா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ பள்ளியிலும் நடத்தப்படவுள்ளது.

எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீ ரெங்கா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீ இந்திராகணேசன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன மருத்துவர்களைக் கொண்டு திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி கண்டோன்மென்ட் புனித ஜேம்ஸ் அகாடமி உயர்நிலைப்பள்ளியிலும், ஜி.வி.என். ரிவர்சைடு மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தில்லை நகர் டாக்டர் ஜி.சகுந்தலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது.

இச்சிறப்பு முகாம் 21.06.2026அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இச்சிறப்பு முகாமில் இரத்த சர்க்கரை, கண் பரிசோதனை, உயர் இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இசிஜி போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலமருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை ஆகிய சிகிச்சைகளுக்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு தரமான மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். மக்கள் நலம் பேணும் உன்னத நோக்கில் நடைபெறும் இச்சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு தங்களுக்குரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான திரு.சி.ரமேஷ் அவர்கள் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *