Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா மேகதாதுவில் செங்கல் வைக்க முடியாது, இரு மொழிக் கொள்கையில் உறுதி – அமைச்சர் விஸ்வநாதன்

விவசாயிகள் பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழக அரசு செயல்படாது. எங்களை மீறி மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது.- தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு 1,230 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்கள்..

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசியது :

துணை வேந்தர்கள் நியமனம் என்பது, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஜீன் 29 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. வழக்கின் நிலுவை தன்மையை பொறுத்து உயர்கல்விதுறையும், தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களுடன் இணைந்து பேசி நல்ல முடிவு எடுக்கபடும். மேலும் விரைவில் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் அறிவிக்கபடும் என நல்ல செய்தியை நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். மேலும் கடந்த காலங்களில் மாநில உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் தற்போது உள்ள அரசு சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி அனைத்திற்கும் தீர்வு காணப்படும். ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைக்கப்படும். மேலும் பேராசிரியர்கள் நியமனம், 8,000 பயிற்சி ஆசிரியர்கள் நியமனம், பயிற்சி ஆசிரியர்களின் நிலைப்பாடுகளை குறித்து தமிழ்நாடு முதலமைச்சரா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்திற்கும் தமிழ்நாடு முதல்வர் தீர்வு காண்பார்.

தமிழ்நாட்டில் கல்வி பொது பட்டியலில் உள்ளது, அவற்றிலிருந்து விடுவித்து மாநில பட்டியலுக்கு வர வேண்டும். அப்போதுதான் எங்களால் சுதந்திரமாக செயல்பட முடியும் அதற்கான அறிவிப்புகள் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதிகளை நிச்சயம் பெற்று தருவார்.

இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய அரசியல் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தற்போது எங்கள் இணைந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து இந்த ஆட்சியை தொடர்ந்து 5 ஆண்டு காலம் நடத்துவதற்கு உறுதுணையாக இருப்போம். தமிழ்நாட்டில் தற்போது தமிழ்நாடு முதல்வர் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சியை அமைப்பதே எங்கள் நோக்கம் என்றார்.மேலும் தமிழக மாணவர்கள் தமிழ் ஆங்கிலத்தை தொடர்ந்து பிரெஞ்சு ஜாப்பனீஸ் உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொண்டால் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்ற உறுதுணையாக இருக்கும் மற்ற மொழிகளை பயின்றால் மாணவர்களுக்கு நல்ல விஷயம்தான். மத்திய அரசு மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழியை தான் படிக்க சொல்கிறார்கள் அதில் இது பொருந்துமா என்ற கேள்விக்கு.

 

மத்திய அரசு சொல்வது சமஸ்கிருதம் இந்தி உள்ளிட்ட மொழிகளை தான் நாங்கள் சொல்வது ஜாப்பனீஸ் பிரென்ச் போன்ற மொழிகளை கற்றுக் கொண்டால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறுகிறோம் தமிழகத்தில் எப்பொழுதும் இரு மொழிக் கொள்கைதான் மூன்று மொழிக் கொள்கைக்கு நாங்கள் எப்போதும் அனுமதி அளிக்க மாட்டோம் அதனை ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம்.மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. காங்கிரஸ் ஆளும் கட்சியாக கர்நாடகாவில் இருந்தாலும் மாநிலம் வேறு அதனால் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். விவசாயிகள் பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழக அரசு செயல்படாது. எங்களை மீறி மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது.

சினிமா பாடலுக்கு நான் நடனம் ஆடியது தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடினேன் அங்கு இருந்த இளைஞர்கள் எங்களுடன் சேர்ந்து நடனமாட அழைத்தனர் இதன் காரணமாக அவர்களின் கோரிக்கையை ஏற்று நடனம் ஆடினேன் இளைஞர்களின் வார்த்தைக்கு மதிப்பு அளிக்க வேண்டி நான் நடனம் ஆடினேன். இதில் ஒன்றும் தவறு இல்லை என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *