Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கொஞ்சூண்டு ஜெலுசில் சாப்பிட்டு வீட்டில் இருங்கள் – திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி

திமுகவினர் கொஞ்சூண்டு ஜெலுசில் மருந்தை குடித்துவிட்டு வீட்டில் இருக்கலாம் அமைச்சர் ரமேஷ் பேட்டி.

திருச்சி மணப்பாறையில் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் ரமேஷ், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.இதன் பின்னர், மணப்பாறையில், செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரமேஷ் பேசிய போது..ஒரு விஷயத்தை வந்து கிளாரிஃபை பண்ணனும் அப்படின்றதுக்காக தான் மெயினா உங்களை எல்லாம் சந்திக்கிறோம். என்ன அப்படின்னா கடந்த சில தினங்களாக உங்க எல்லாருக்குமே தெரிந்திருக்கும். திருச்சியில வந்து திமுகவினரால என் மேல ஒரு டார்கெட்டட் கேம்பைன் அட்டாக் வந்து நடந்துகிட்டு இருக்குது. எங்களுடைய வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் திருச்சியை தங்கள் கோட்டை என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் இன்றைக்கு அந்த கோட்டை தளபதியின் கோட்டையாக மாறிடுச்சு அப்படின்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஸ்ரீரங்கத்தின் எம்எல்ஏவை காணவில்லை திருச்சியின் அமைச்சர் ரமேஷை காணவில்லை அப்படின்னு சொல்லிட்டு ஒரு டார்கெட்டட் அட்டாக். பொதுமக்களே வந்து இதை சொல்வது போலவும் பொதுமக்கள் இப்படி ஒரு கம்ப்ளைன்ட்டை முன்வைப்பது போலவும் ஒரு டார்கெட்டட் கேம்பைனை வந்து பார்த்தீங்கன்னா ரன் பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க. அது முற்றிலும் பொய்யான ஒரு கேம்பைன் இது பொதுமக்கள் எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.

இதை வெறும் வாய் வார்த்தையாக சொல்லக் கூடாது இதற்கான ஆதாரங்களோடு உங்களிடம் பேசணும் என்று தான் நான் இன்னைக்கு இங்கு வந்தது இது வந்து பார்த்தீங்கன்னா கடந்த ஒரு மாத காலமாக என்னுடைய ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு உடனடியாக என்னுடைய எம்எல்ஏ அலுவலகத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளை வைத்து என்னுடைய அலுவலக அதிகாரிகளை வைத்து என்னுடைய பயணிக்கக்கூடிய கழகத்தின் தோழர்கள் நிர்வாகிகளை வைத்து சம்பந்தப்பட்ட மக்களின் குறைகளை உடனடியாக தீர்த்ததற்கான இது ஆதாரம். நீங்க பார்த்தீங்கன்னா பல்வேறு இடங்களில் தொடங்கப்படாமல் இருந்தக்கூடிய ப்ராஜெக்ட்ஸ் மக்களுக்கு தேவையான தண்ணீர் தொட்டி திறக்கிறது கழிப்பறைகள் திறப்பது அதேபோல சுத்தம் செய்து கொடுப்பது மக்கள் என்னென்ன எல்லாம் கோரிக்கை வத்தாங்களோ அது அத்தனையும் நம்முடைய கழக தோழர்களும் என்னுடைய எம்எல்ஏ அலுவலக

அதிகாரிகளும் உடனடியாக அந்த மக்கள் கோரிக்கைகளுக்கு எல்லாம் செவிசாய்த்து அதை அத்தனையும் செய்து கொடுத்திருக்கிறோம். இது எல்லாம் அதற்கான புகைப்படங்களோடு இருக்கக்கூடிய ஆதாரம் கடந்த ஒரு மாதமாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்ற தொகுதியில் மக்களுடைய குறைகளை தீர்ப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள். நான் ஒரு இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருக்கிறேன். அப்ப தமிழ்நாடு முழுக்க இருக்கக்கூடிய அனைத்து கோயில்களையும் சீரமைக்க கூடிய பணிகளில் ஒரு பக்கம் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

 

அதேபோல திருச்சியின் பொறுப்பு அமைச்சராக நான் இருப்பதுனால உங்க எல்லாருக்குமே தெரியும் இரண்டு வாரத்திற்கு முன்பாக திருச்சியில் இருக்கக்கூடிய அனைத்து துறை அதிகாரிகளும் அழைத்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து ஒரு சீராய்வு கூட்டத்தை நடத்தினோம். அதில் நீங்கள் எல்லாருமே கலந்துகிட்டு அதை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஒவ்வொரு மாதமும் அந்த கூட்டத்தை நடத்துவோம் என்று சொல்லி ஒட்டுமொத்த திருச்சியின் பொறுப்பு அமைச்சராக அந்த சீராய்வு கூட்டத்தை நான் முன்னெடுத்திருந்தேன். அதே சமயத்தில் ஸ்ரீரங்கத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் என்னுடைய பணிகளும் தடைபட்டுறக் கூடாது. நான் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குள் இருக்கணும் இல்லையோ ஆனால் பணிகள் நடந்து கொண்டே இருக்கணும் என்பதற்காக என்னுடைய கழக தோழர்களையும் என்னுடைய எம்எல்ஏ அலுவலக அதிகாரிகளையும் வைத்து இவ்வளவு தூரம் இந்த கடந்த மாதங்களில் எங்களுக்கு வந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

அப்ப இவ்வளவு நடவடிக்கை எடுத்து வந்து பொதுமக்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுக்கக்கூடிய எங்களை பார்த்து ஸ்ரீரங்கம் தொகுதியில் எம்எல்ஏவை காணவில்லை என்று திமுக ஒரு டார்கெட்டட் கேம்பைன் அட்டாக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அமைச்சர் வந்து போன் அடிச்சா எடுக்கிறது கிடையாது. அமைச்சரின் அலுவலகத்தில் வந்து போன் பண்ணா எடுக்கிறது கிடையாது என்று சொல்கிறார்கள். இது என்னுடைய அலுவலகத்தில் நான் நியமித்து இருக்கக்கூடிய இந்த மனுக்களை பெறக்கூடிய அதிகாரி மெயின்டெயின் பண்ற நோட். இதில் ஒவ்வொரு நாளும் வரக்கூடிய போன் கால்ஸில் முக்கியமான குற்றச்சாட்டுகள் எதெல்லாம் ஏற்கத்தக்க குற்றச்சாட்டுகள் இருக்கிறதோ எதெல்லாம் ஏற்கத்தக்க மனுவாக இருக்கிறதோ அந்த மனுக்களுக்கு எல்லாம் பார்த்தீர்கள் என்றால் யார் யார் போன் பண்ணாங்க எந்த தேதியில் பண்ணி இருக்கிறார்கள் யாருடைய மொபைல் நம்பர் என்று எல்லாத்தையும் ரிஜிஸ்டர் பண்றாங்க. ரிஜிஸ்டர் பண்ணி என்னுடைய

கவனத்திற்கு கொண்டு வராங்க. அப்ப இதன் மேல தான் நாங்க நடவடிக்கை எடுக்கிறோம். இந்த ரிஜிஸ்டரை என்னுடைய எம்எல்ஏ அலுவலகத்தில் மெயின்டெயின் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எவ்வளவு கால்ஸ் அட்டென்ட் பண்றோம் எவ்வளவு புகார்கள் அட்டென்ட் பண்றோம் என்று. இது அனைத்திற்கும் மேலாக நாங்கள் எந்தெந்த புகார்களை எல்லாம் சரி செய்து கொடுத்திருக்கிறோமோ அந்த புகார்களுக்கு பொதுமக்களிடம் இருந்து நன்றி கடிதம். இது எல்லாமே என்னுடைய தொகுதியில் இருக்கக்கூடிய ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் இருக்கக்கூடிய மக்கள் நாங்கள் முடித்து கொடுத்த பணிகளுக்காக எனக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதங்கள். தங்கங்களில் இருந்து எல்லா மக்களும் எனக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறார்கள். இந்த கடிதத்தையும் என்னிடமும் என்னுடைய தோழர்களும் அலுவலக எம்எல்ஏ அலுவலக அதிகாரிகளும் கொண்டுவந்து சேர்த்தார்கள். அப்போ இப்படி எல்லா வகையிலும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் மக்களுக்கு செவிசாய்த்து நான்

தொகுதிக்குள் இருந்தாலும் அல்லது தமிழ்நாடு முழுக்க மற்ற இடங்களிலாம் மற்ற மாவட்டங்களில் கோவில்களில் ஆய்வில் சுற்றுப்பயணத்தில் இருந்தாலும் தொகுதி பணிகளை மிக சீரும் சிறப்புமாக நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல திருச்சி மாவட்டத்திற்கான வேலைகளையும் ஒரு பொறுப்பு அமைச்சர் என்ற முறையிலே அந்தந்த தொகுதியின் எம்எல்ஏக்களோடு சேர்ந்து என்னென்ன பணிகள் எல்லாம் மிச்சம் இருக்குது என்னென்ன குறைகள் இருக்கோ அதை எல்லாம் சரி செய்வதற்கான வேலைகளையும் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அப்ப இந்த அளவுக்கு ஈடுபட்டு இருக்கக்கூடிய என்னை பார்த்து இந்த திமுகவினர் வேண்டும் என்றே டார்கெட் செய்து கொண்டு எம்எல்ஏவை காணவில்லை அமைச்சரை காணவில்லைன்னு ஒரு பொய்யான புகாரை மக்கள் சொல்வதாக இவர்களே வந்து ஒரு டார்கெட்டட் கேம்பைன் அட்டாக்ஸை எங்கள் மீது நடத்திக்கிட்டு இருக்காங்க. இதனால ஒரு காலமும் எந்த பிரயோஜனமும் கிடையாது. ஏன்னா மக்கள் மிகத் தெளிவாக எங்களை ஆதரிக்கிறாங்க. எங்களுடைய வெற்றியை தாங்க முடியாமல் நீங்க இது போன்ற வேலைகள் செய்வதற்கு பதிலாக கொஞ்சோண்டு ஜெலிசெல் வாங்கி சாப்பிட்டு வீட்டில் இருக்கலாம். இது சம்பந்தமா புகார் கொடுக்கலாம். இதுக்கு புகாரே தேவையில்லையே. நாங்க செய்யக்கூடிய மக்கள் பணியே போதும் நான் ஏன் புகார் கொடுக்கணும். எனக்கு இந்த டார்கெட்டட் அட்டாக்கால் ஒரு பயனும் எனக்கு எனக்கு ஒரு பாதிப்பும் கிடையாது. இப்ப இந்த டார்கெட்டட் கேம்பைனால் என்ன நடக்கப் போகிறது? என்ன அமைச்சரில் இருந்து மாற்றப் போகிறீர்களா? இல்லை எம்எல்ஏவில் இருந்து தகுதி நீக்கம் பண்ண முடியுமா? என்ன பண்ண முடியும்? மக்கள் தேர்ந்தெடுத்த பதவி இது. இப்ப மக்களுக்காக நாங்க பயணிக்கிறோம். நாங்க இரண்டு நாள் அமைச்சரா இருந்தாலும் சரி இல்ல இரண்டு நாள் எம்எல்ஏவாக இருந்தாலும் சரி அந்த இரண்டு நாள் உண்மையாக உயிரைக்

 

கொடுத்து அந்த மக்களுக்கு வேலை செய்ய நாங்க தயாராக இருக்கிறோம். எங்களுடைய கழக தோழர்கள் யாரும் பதவிக்காக இங்கு வந்தவர்கள் கிடையாது. எங்களுடைய எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் பதவிக்காக இங்கு வந்தவர்கள் கிடையாது. பதவியை வைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்க வந்தவர்கள் கிடையாது. மக்களுக்கு பணி செய்யணும்னு நாங்க வந்திருக்கிறோம். அதனால எங்களுக்கு வந்து எந்த பயமும் கிடையாது. பதவியில் இருக்கிறவரை மக்களுக்கு சேவகனாக மக்களுக்கு வேலை செய்யப் போகிறோம். அதனால் தயவுசெய்து இது போன்ற டார்கெட்டட் கேம்பைன்ஸ் எல்லாம் செஞ்சு உங்களுடைய எனர்ஜியை வேஸ்ட் செய்வதற்கு பதிலாக நீங்க ஜெயித்து இருக்கிறீர்கள் இல்லையா அந்த தொகுதிகளிலாவது மக்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்யுங்கள்னு தான் சொல்றோம். 234 தொகுதிகளிலும் அடுத்த தேர்தலில் நிச்சயமாக த.வே.க வெற்றி பெறும். முடிஞ்சால் முயற்சி செய்யுங்கள். மக்கள் பணி செய்வதை விட்டுவிட்டு மக்கள் பணி செய்றவங்களை இந்த மாதிரி டார்கெட்டட் கேம்பைனை வைத்து அட்டாக் பண்ணாதீங்க. இந்த மாதிரி டார்கெட்டட் கேம்பைனால் ஒரு யூஸும் கிடையாது மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். காலையிலிருந்து எல்லா இடங்களிலும் முகாம்களில் வந்து நாங்கள் போயிட்டு

வரோம். கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா முடித்துட்டு வரேன். எல்லா இடங்களிலும் மக்களுடைய வரவேற்பு மிகவும் அமோகமாக இருக்கிறது. மக்கள் பாராட்டுகிறார்கள் அமைச்சராகவும் ஸ்ரீரங்கத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் என்னுடைய பணி சிறப்பாக இருப்பதாக பாராட்டுகிறார்கள். இது வந்து தலைவர் வரைக்கும் இது தெரியும். நான் மட்டும் கிடையாது திருச்சியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு எம்எல்ஏவும் ஒவ்வொரு தொகுதியின் தா.வே.கா எம்எல்ஏக்களும் மிகச் சிறப்பாக பணியாற்றுவதாக மக்கள் எல்லாரும்மே பீட்பேக் கொடுத்துட்டு இருக்கிறார்கள். அதனால திருச்சியை தளபதியின் கோட்டையாக நாங்கள் வென்ற அன்றைக்கே மாற்றி விட்டோம் என்று ஒவ்வொரு நாளும் எங்கள் செயல்களால் மாற்றி வைக்கிறோம். மிகவும் ஸ்ட்ராங்காக மாத்திகிட்டு வரோம். திருச்சி இன்னும் 50 ஆண்டுகள் அல்லது 100 ஆண்டுகள் ஆனாலும் தளபதியின் கோட்டையாக தான் இருக்கும். அதை யாராலும் மாற்ற முடியாது. அதற்காக நீங்கள் வந்து டார்கெட்டட் கேம்பைன் எல்லாம் பண்ணி எங்களை வந்து எந்த விதமான இறக்கமும் செய்ய முடியாது. எங்களுடைய மதிப்பை எல்லாம் நீங்கள் கெடுக்க முடியாது. முடிஞ்சால் மக்களுக்கு நாலு நல்ல விஷயங்கள் செய்யுங்கள். நல்ல விஷயம் செஞ்சு மக்கள் கிட்ட பேரை சம்பாதித்துக் கொள்ளுங்கள். சட்டமன்றத்தை சொல்லுங்க. கேள்வி கேட்டால் துறை அமைச்சர்கள் எல்லாம் பதில் சொல்ல மாட்டாங்க குறிப்பிட்ட ஒரு மூணு அமைச்சர்கள் மட்டும் தான் வந்து பதில் சொல்வார்கள். அப்படி என்று திமுகவின் குற்றச்சாட்டு நல்லா தெரிந்துகொள்ளுங்கள். சட்டமன்றத்தில் வந்து துறை ரீதியான ஒன்னும் பெரிய கேள்விகள் எல்லாம் அங்கே யாருமே வைக்கவில்லை. அவங்க வைத்தது பூராவே தேவையில்லாத கேள்விகள் தான். நீங்கள் வந்து ஒரு பாலிசி ரிலேட்டடாக ஒரு கொஸ்டின்ஸ் பண்ணும் பொழுது தலைவர் பாலிசி ரிலேட்டடாக ஒரு கொஸ்டின் வைக்கும் போது நாங்கள் எல்லாருமே தலைவருடைய தமிழக வெற்றிக் கழகத்தினுடைய மதச்சார்பற்ற சமூக நீதி என்ற பாலிசியை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தவர்கள். அப்போ அந்த பாலிசிக்கு எதிராக நீங்கள் கேள்வி கேட்டீர்கள் என்றால் நாங்கள் எல்லாருமே பதில் சொல்ல தான் செய்வோம். அது வந்து துறை ரீதியான அமைச்சர் தான் பதில் சொல்லனும்னு அவசியம் கிடையாது. அந்த பாலிசியை பின்பற்றக்கூடிய நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களுடைய அமைச்சர்களும் பதில் சொல்கிறார்கள். அடுத்தது திட்டமிட்டு ஒருமையில் பேசுவது. சட்டமன்றத்தில் ஒரு மாண்புமிகு முதலமைச்சரை ஒருமையில் பேசுவது கிண்டல் பண்ணி பேசுவது கேலி பண்ணி பேசுவது தரம் தாழ்ந்து பேசுவது இதெல்லாம் சட்டமன்றத்தின் மாண்பா முதலில். அப்போ ஒரு சட்டமன்றத்தின் மாண்பை கொஞ்சம் கூட வந்து பேணி காக்காமல் ஒரு முதலமைச்சரை பார்த்து இப்படி எல்லாம் வந்து அவங்க வந்து கேலி கிண்டல் பண்ணும் வகையிலே பேசுவது ரியாக்ஷன்ஸ் கொடுப்பது அப்படின்னா பதில் சொல்ல தான் செய்வோம். நாங்கள் திரும்ப கேள்வி கேட்க தான் செய்வோம். எங்கேயாவது தா.வே.காவுடைய சட்டமன்ற உறுப்பினர்களோ அமைச்சர்களோ ஒரு வார்த்தை கூட எதிரில் இருப்பவர்களை பார்த்து மாண்பு குறைவாக எதாவது பேசினோமா? மரியாதை குறைவாக எதாவது பேசினோமா? ஏதாவது வார்த்தைகளை பயன்படுத்தினோமா? கிடையாது.

 

 

 

அவங்க அதை செஞ்சுகிட்டு இருக்கிறார்கள். மாற்றம் வேணும்னு சொல்லிட்டு ஏமாற்றம்தான் மிஞ்சின என மு.க. ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். இது சம்பந்தமாக. அதாவது மாற்றம் வேணும்னு மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். சரிங்களா? வந்து ஒரு மாசம் தான் ஆகுது. முதலில் இவங்க அஞ்சு வருஷமா செஞ்ச சீர்கேடுகள் இருக்கிறது இல்லையா நிர்வாக சீர்கேடு. அதே மாதிரி இவர்களுடைய பொருளாதார சீர்கேடு இருக்கு பார்த்தீங்கன்னா இதை சரி செய்வதற்கு பல மாதங்கள் ஆகும். ஏன்னா ஏற்கனவே எங்களுடைய வெள்ளை அறிக்கை சொல்லியிருக்கிறோம். 50 ஆண்டுகளில் இல்லாத கடனை ஐந்தே ஆண்டுகளில் வந்து டபுள் மடங்காக ஆக்கிவிட்டு போயிருக்கிறார்கள். அப்போ இந்த நிர்வாகத்தை எப்படி சரி செய்வது? அதற்கான காலம் எடுக்குமா இல்லையா? அப்போ அந்த காலத்தை நாங்கள் தான் பயணம் பண்ணிட்டு இருக்கிறோம். நிர்வாக ரீதியாக செயல்படுகிறோம். இன்றைக்கு எல்லா துறைகளிலும் ஊழலையும் இந்த லஞ்சத்தையும் ஒழித்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் ஒழித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் எல்லா இடங்களிலுமே. அப்போ இந்த பணிகளை எல்லாம் நாங்கள் படிப்படியாக செஞ்சுகிட்டு இருக்கிறோம். அதுக்குள்ள ஒரு மாதத்தில் மாற்றம் வேண்டி மக்கள் ஏமாற்றத்தை அடைந்தால் மக்கள் சொல்லவில்லை. மக்கள் சொல்லவில்லை அவர் தான் சொல்லிக்கிறார். ஏன்னா அவருக்கு என்ன பிரச்சனை அப்படின்னா சட்டமன்றத்தில் இருந்து இதை எல்லாம் பேசிக் கொண்டிருந்தவர் வீட்டில் இருந்து சட்டமன்ற நிகழ்வுகளையும் பார்க்க வச்சிருக்கிறோம். சட்டமன்றத்துக்குள் வந்து இதை எல்லாம் பேசிக் கொண்டிருந்தவரை இன்றைக்கு வீட்டில் உட்கார வச்சிருக்கிறோம். உட்கார வைத்து சட்டமன்ற நிகழ்வுகளை எல்லாம் வீட்டில் லைவ் ஆக பார்க்க வச்சிருக்கிறோம். அப்போ இந்த நிகழ்வு நடந்தது ஏத்துக்க முடியாமல் எப்படி வந்து என் மேலே இப்படி ஒரு டார்கெட்டட் அட்டாக் திருச்சியில் நடக்குதோ அந்த மாதிரி ஒட்டுமொத்தமாக திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய விஷயத்தை வந்து தன்னுடைய வெற்றி பெற முடியாமல் இருப்பதை வந்து இந்த மாதிரியான ஒரு ஒரு வார்த்தையால் வெளிப்படுத்திக்கிட்டு இருக்கிறாரே. ஆனால் கழகம் மிகச் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது மக்கள் மிக பெரிய வரவேற்பு கொடுக்கிறார்கள். சார் பல்வேறு கோவில்களுக்கும் தொடர்ந்து சென்று ஆய்வு நாடகம் மேற்கொண்டு இருக்கீங்க. திருச்செந்தூர் கோவில்ல 1/7 லிருந்து அங்க செல்போன் முற்றிலும் பயன்படுத்தக் கூடாது என்று. மற்ற கோயில்களுக்கு இதே நீதிமன்ற உத்தரவு பொருந்துமா பொருந்தாதா? அதை எஸ்டாப்ளிஷ் பண்றதுக்கான நடவடிக்கை. திருச்செந்தூர் கோவில்ல அந்த நீதிமன்ற உத்தரவு இருக்குது. அந்த உத்தரவை வந்து உடனடியாக பின்பற்ற சொல்லி இது பண்ணியிருக்கிறோம். அடுத்ததாக நம்ம வந்து பார்த்தீங்கன்னா கோயில்களுடைய நிர்வாகத்தை சீர் செய்வதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறோம். குறிப்பாக வந்து ஆன்லைன் டிக்கெட் புக்கிங்க்காக நம்ம மிகப்பெரிய அளவில் உழைப்பை போட்டுகிட்டு இருக்கிறோம். இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் அதையெல்லாம் முதல்ல ஃபேஸ் 1 ஃபேஸ் 2 பெரிய கோயில்களுக்கும் அதற்குப் பிறகு மற்ற கோயில்களுக்கும் கொண்டு வருவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம். அப்படி கொண்டு வரும்போது ஒரு கோயில்களுக்கு நீதிமன்றமோ இல்லை வந்து அரசாங்கமோ என்னென்ன எல்லாம் வந்து வழிமுறைகள் கொடுத்திருக்கிறார்களோ அது அத்தனையும் சரியாக ஃபாலோ செய்து மக்கள் மனநிறைவோடு கோயிலுக்கு வந்து மனநிறைவோடு தரிசனம் செய்து மனநிறைவோடு திரும்ப வீட்டுக்கு போகும் அளவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்கிறோம். 246 கோடி ரூபாய் மதிப்புள்ளான இந்த திட்டங்கள் எல்லாம் ரத்து பண்ணி இருக்கீங்க. அடுத்து என்ன சார் பண்ணப் போகிறீர்கள்? அதாவது 246 கோடிக்கான திட்டங்களை நாம் ரத்து பண்ணி இருக்கிறோம் அப்படின்னா அது எதுவுமே துவங்காத ப்ராஜெக்ட். இன்னும் வந்து அந்த ப்ராஜெக்ட்டை வந்து ப்ரோபோசல் கொடுத்து பல்வேறு நிலைகளில் அது இன்னும் துவங்காமல் இருக்கக்கூடிய ப்ராஜெக்ட் ஒன்று. இன்னொன்று இன்றைக்கு மக்களுக்கு வந்து அடிப்படையாக தேவை என்ன அப்படின்னா கோயில்கள்ல அவங்க தங்கும் இட வசதிதான் மக்கள் அதிகமாக கேட்கிறார்கள். இன்றைக்கு வரக்கூடிய பக்தர்கள் நாங்க தங்குறதுக்கு இடம் இல்லை. அன்னதானம் சாப்பிடுறதுக்கு இடம் இல்லை. கழிப்பறை வசதிகள் இல்லை. குடிநீர் வசதி இல்லை. பார்க்கிங் வசதி இல்லை இதெல்லாம் வந்து மக்கள் வந்து கேட்டுக்கிட்டு இருக்காங்க. அப்ப நம்ம முதல்ல கவனம் செலுத்த வேண்டியது இதுதான். அப்ப இந்த மாதிரியான ப்ராஜெக்ட்டுக்கு பதிலாக நம்ம இந்த விஷயங்களில் அந்த பணத்தை செலவு பண்ணனும் அப்படின்னா அது பப்ளிக்குக்கும் வரக்கூடிய பக்தர்களுக்கும் மிகப்பெரிய யூஸ்ஃபுல்லான ஒரு விஷயமாக இருக்கும். அப்ப துவங்கப்படாத இந்த ப்ராஜெக்ட்ஸை வந்து நம்ம கேன்சல் பண்ணிட்டு தெளிவாக சொல்லியிருக்கிறோம் நம்முடைய அறிக்கையிலுமே அரசாங்கத்தின் அந்த அறிக்கையிலேயே பார்த்தீங்கன்னா இந்த ப்ராஜெக்ட்டுக்கு பதிலாக மக்களும் பக்தர்களும் கோவில்களும் பயன்படக்கூடிய புதிய திட்டங்களை வந்து நாங்கள் கொண்டு வருவோம் என்று சொல்லியிருக்கிறோம். அதற்கான விஷயங்களை விரைவில் அறிவிப்போம். இந்த மாவட்டத்தினுடைய பொறுப்பு அமைச்சர் ஏற்கனவே எம்எல்ஏ வலியுறுத்தி இருக்கிறார் இந்த காவிரி உபரி நீரை இந்த மாயாறிலிருந்து நம்முடைய பொன்னணியாறு அணை கல்லணைகளுக்கு எல்லாம் கொண்டு போறதுக்கு. பொறுப்பு அமைச்சராக இருந்து நீங்க முதலமைச்சரிடம் வலியுறுத்தினீர்கள். நிச்சயமாக அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசிக்கிட்டு இருக்கிறோம். அதற்கான பிளான்ஸ் என்ன ப்ரோபோசல் என்ன அதை எப்படி செய்யணும் என்ற அந்த ஆய்வு அறிக்கைகள் எல்லாம் கேட்டு இருக்கிறோம். அந்த ஆய்வு அறிக்கை வந்த உடனே உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கு என்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் தீர்வு செய்வோம் என்று பேசினார்.

 

 

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

 

 

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *