திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல்துறை மற்றும் காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி இணைந்து போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் நடந்த மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பெனாவத் தொடங்கி வைத்தார்தமிழக அரசு மற்றும் காவல்துறையினர் இணைந்து “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற மாபெரும் இயக்கத்தை முன்னெடுத்துள்ளனர்.

மாணவர்களிடையே போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் போதை பொருட்களால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் காவல் நிலையம் மற்றும் காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .

இந்தப் பேரணியை திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பெனாவத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.திருவெறும்பூர் தாசில்தார் கார்த்திகேயன் உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த பேரணியானது காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் தொடங்கி திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக பாப்பா குறிச்சி காட்டூர் வரை சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது.

பேரணியின் போது மாணவ, மாணவிகள் கையில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டு சென்றனர்.இந்த விழிப்புணர்வு பேரணியில் துவாக்குடி இன்ஸ்பெக்டர் தீபநாதன், சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
ttps://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments