திருச்சி திருவெறும்பூர் அருகே பொன்மலை நார்த் டி ரயில்வே காலனி சிஎஸ்ஐ பள்ளி பின்புறம் ஆட்டோவில் மர்ம நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக பொன்மலை போலீசாருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்மலை போலீசார் விசாரணை செய்த போது அவர் அம்பிகாபுரம் பகுதியில் வசித்து வந்த ரவிச்சந்திரன் வயது (52) என்பதும் இரண்டு கால்களையும் விபத்தில் இழந்த ரவிச்சந்திரன் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. மேலும் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், மகள் உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப சண்டையால் மனைவி மற்றும் மகன், மகளை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இவர் வீட்டுக்கே செல்லாமல் ஆட்டோவில் சுற்றி

வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் இங்கு எதற்காக வந்தார்? எப்படி இறந்தார்? என்பது குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments