திருச்சி ஒத்தக்கடை பகுதியில் இருந்து சுங்கத்துறை அலுவலகம், சேவா சங்கம் பள்ளி,சோனா மீனா திரையரங்கம்,திருச்சி புறநகர் பேருந்து நிலைய பணிமனை வரை ஒருபுறம் சாலை புதிதாக போடப்பட்டு சில மாதங்களாக மீதமுள்ள சாலை பணிகளை மேற்கொள்ளவில்லை என்ன காரணம் என்று கேட்டால் சரியான பதிலும் அதிகாரியிடம் இருந்து வரவில்லை. ஏற்கனவே ஒப்பந்ததாரர் அந்த பணிகளை ஏன் இப்படி அரைகுறையாக செய்து உள்ளார் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி

உள்ளனர். அவருக்கு பணம் வரவில்லையா அல்லது பணிகளை செய்து தராமல் போட்டு விட்டு சென்றாரா என்ற கேள்வி எழுகிறது. ‘கடவுள் பாதி, மிருகம் பாதி’ என்பார்கள் பாதி நல்ல சாலை மீதமுள்ள சாலை பணிகள் நிறைவடையாமல் உள்ளது இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஒரு பக்கம் உள்ள சாலை உயரம் அதிகமாகும் மறுபடியும் உள்ள சாலை உயரம் குறைவாக உள்ளது இரவில் வானங்களில் பயணிப்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும் இதற்கு உடனடியாக

மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருபுறம் புது தார் சாலை போடப்பட்டு மறுபுறம் அந்த சாலைக்கு சமமாக புதிய சாலை போடாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி அனைவரும் எழுப்பி வருகின்றனர். விரைவில் இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments