திருச்சி சத்திரம் பேருந்துநிலையத்தில் வாடகைபாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்வைப்புதிருச்சி சத்திரம் பேருந்துநிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது, இந்த வணிக வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்த கடைகள் ஒவ்வொன்றுக்கும் மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு மாதமும் வாடகை வசூல் செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் வணிக வளாகத்தில் உள்ள 5 கடைஉரிமையாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வாடகைக்கு கட்டாமல் இழுத்தடித்து வந்தனர், வாடகைத் தொகை 30 லட்சம் ரூபாய் செலுத்த வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது

ஆனால், நோட்டீஸ் அனுப்பப்பட்டும் கடை உரிமையாளர்கள் வாடகை பணத்தை கட்டாதகாரணத்தால் இன்று மாநகராட்சி கமிஷனர் உத்தரவு பேரில் திருவரங்கம் உதவி கமிஷனர் சீனிவாசன் மேற்பார்வையில் மாநகராட்சி அதிகாரிகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் வாடையை செலுத்தாத ஐந்து கடைகளுக்கு சீல் வைத்து பூட்டினர். இதனால் சத்திரம் பேருந்து நிலையம் வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments