திருச்சி மாவட்டம், முசிறியில் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் எதிரே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோயிலில், ஆடி மாதத்தையொட்டி சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, மகா மாரியம்மன் அகல் விளக்கு அமைப்பில் அமர்ந்திருப்பது போன்ற கண்கவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த பூஜையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

குறிப்பாக தமிழகத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும்,
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பொழியவும், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும்,
தொழில் வளம் மேம்படவும்,
உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும் சிறப்பு கூட்டு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து மகா தீபஆராதனை அம்மனுக்கு காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

விழாவில் முசிறி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision

Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments