திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் திருவானைக கோவில் வார்டு எண் 6-ல் அமைந்துள்ள ஸ்ரீராம் நகர் பூங்கா, மொத்தம் 3,575 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் 10,000 மரக்கன்று நடும் சிறப்பு குறுங்காடு திட்டத்தை மாநகராட்சி ஆணையர் திரு. வீர் பிரதாப் சிங் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

இப்பூங்கா 3,575 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் சிறப்பு குறுங்காடு மரக்கன்று நடும் திட்டம் KRT Motors மற்றும் Hero நிறுவனங்கள் (CSR) திட்டத்தின் கீழ் நிதி மொத்தம் 10,000 மரக்கன்றுகள் வழங்கினார்கள் . இதில் 26 வகையான நிழல்தரும் மரங்கள், பூக்கும் மரங்கள், பழம்தரும்மரங்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில் நடவு செய்யப்பட உள்ளன. நடவு செய்யப்பட்ட அனைத்து மரக்கன்றுகளுக்கும் சொட்டுநீர் பாசன வசதி, பாதுகாப்பு வேலி, மற்றும் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும்,திருச்சி மாநகரில் நகர்ப்புற வெப்பத்தைக் குறைக்கவும், காற்று மாசுபாட்டைத் தவிர்க்கவும் ஜப்பானிய மியாவாகி (Miyawaki) முறையில் அடர்ந்த குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் இப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மாநகரின் ஐந்தும் மண்டலங்களில் உள்ள பூங்காக்கள், சாலையோர பகுதிகள், ஆற்றுக்கரை பகுதிகள் ,கரையோ பகுதிகள் மாநகராட்சி பொது இடங்கள் மற்றும் பல பகுதிகளில் இந்த அடர்வன காடுகள் உருவாக்கப்படுகின்றன.மரங்களின் வகைகள்: வேம்பு, புங்கை, இலுப்பை, நாவல் போன்ற உள்நாட்டு மரக்கன்றுகள் அதிகளவில் நடப்படுகின்றன.வளரும் வேகம்: வழக்கமான முறையை விட பத்து மடங்கு வேகமாக வளர்ந்து, குறுகிய காலத்தில் சுயமாக இயங்கும் இயற்கையான காடாக இது மாறுகிறது.சுற்றுச்சூழலை பாதுகாக்க திருஉருவாக்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் திரு .விர் பிரதாப் சிங் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள் .
இந்நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர் அண்ணாதுரை, உதவி ஆணையர் சீனிவாசன். உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராம், முன்னாள் உதவி ஆணையர் வைத்தியநாதன் , சுகாதார அலுவலர் வினோத் கண்ணா , இளநிலை பொறியாளர் மதன்குமார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் அலுவலர்கள், அப்பகுதி குடியிருப்பு சங்கத்தினர் கலந்து கொண்டார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments