தேதி: 02.08.2026 குமாரவயலூர் கிராம பொதுமக்கள் சார்பாக
அனுப்புநர்
நா. ராஜேந்திரன்
டெல்டா மண்டல துணைத் தலைவர்
த.மா.கா. விவசாய பிரிவு
No.89, லெட்சபி பிளாட்,
குமார வயலூர். திருச்சி – 620102
செல்: 8883542524

செய்தி:
காவேரி மாயனூர் பிரிவிலிருந்து பிரிந்து சேரன்டி ஏரி தஞ்சை மாவட்டம் வரை 32,000 ஏக்கர் பாசனம் பெறும் அயன்அருஞ்சை நிலங்கள் உள்ளது. இதில் குமாரவயலூர் தேரையான் சன்னதி வாய்க்கால் தமிழகத்தில் சுமார் 280 ஏக்கர் பாசனம் அளிக்கும் தமிழகத்தில் 2-வது மிகப்பெரிய பாசன குமுழி ஆகும்.

இது முழுமையாக தூர்ந்து தண்ணீர் வராத நிலையில், விவசாயிகள் நீர்வளத்துறையிடம் முறையிட்டு பணிசெய்யாத நிலையில், குமாரவயலூர் விவசாயிகள் சுமார் மூன்று லட்சம் செலவில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் தங்கள் சொந்த செலவில் தூர் வாருகின்றனர். எனவே தமிழக அரசு மறுபடியும் விவசாயிகள் அடங்கிய நீர்பாசன குழுக்களை புதுப்பித்து நடைமுறைபடுத்த வேண்டுகிறோம். மேலும் நீர்வளத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள B பிரிவு வாய்க்கால் தூர்வார போதிய நிதியை பெற்று பாசன வாய்கால்கள் தூர்வார துரித நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube






Comments