Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பாரதிதாசன் பல்கலையில் Clean & Green – நீர்நிலை பணிகள் தொடங்கின

Rotary Club of Trichy Dynamic – FONS Trust இணைந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நீர்நிலைகள் மறுசீரமைப்பு பணி தொடக்கம்

திருச்சி, ஆக. 6:பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் பெர்குலேஷன் குளங்களை மறுசீரமைத்து, மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் Rotary Club of Trichy Dynamic மற்றும் FONS Trust இணைந்து சமூக நலப்பணியை தொடங்கியுள்ளன.

பல்கலைக்கழகத்தின் Clean & Green Initiative ஒருங்கிணைப்பாளர் டாக்டர் s.ராஜகுமார் அவர்களின் வேண்டுகோளின் பேரில், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் மற்றும் பெர்குலேஷன் குளங்களை கட்டம் கட்டமாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வில் Rotary Club of Trichy Dynamic தலைவர் Rtn. Er. ராஜ்மோகன் ப FONS Trust அறங்காவலர் திரு. T ராம்குமார், டாக்டர் வேலு ராஜேஷ் கண்ணன் (Member, Vice-Chancellor’s Committee), பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் (FAC) டாக்டர் ஆர். காளிதாசன் ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் பல்வேறு Rotary Clubs-இன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், FONS Trust நிர்வாகிகள், மண்ணும் மரமும் அமைப்பின் பிரதிநிதிகள், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் திரளாக பங்கேற்று, இத்திட்டம் வெற்றியடைய தங்களது முழு ஒத்துழைப்பை உறுதியளித்தனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீர்நிலைகளின் நீர் சேமிப்பு திறன் மேம்படுத்தப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரினப் பன்முகத்தன்மை பாதுகாப்பு மற்றும் பசுமை வள மேம்பாட்டிற்கும் முக்கிய பங்களிப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் இணைந்து செயல்படும் இத்தகைய முயற்சிகள், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் முன்னோடி திட்டமாக அமையும் என்றும், எதிர்கால தலைமுறைக்கான நீர் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *