துறையூர் கோலோச்சும் முருகர் கோவிலில் பரம்பரை அறங்காவலர் பிரச்சனையில் அண்ணன், தம்பிகள், சகோதரிகள் மற்றும் நண்பர்களைக் கொண்டு மாற்றுத்திறனாளி (ஒருகால் ஊனமுற்றவர்) சகோதரனை வாயில் துணியை கட்டி உடல் முழுவதும் கம்பியாலும் கட்டி ரூமில் வைத்து திரைப்படப்பாடியில்துன்புறுத்தள்.
துறையூர் போலீசார் தன்னை மீட்டு காப்பாற்றியும், இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி திருச்சி காவல் கண்காணிப்பாளரிடம் மாற்றுத்திறனாளி வீடியோ ஆதாரங்களுடன் புகார்..

தான் உயிருக்கு பயந்து என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. எனக்கு வரும் அறங்காவலர் பணியையும் பெற்றுத் தரவும் கோரிக்கை…
திருச்சி மாவட்டம், துறையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தனியாருக்கு சொந்தமான கோலோச்சும் முருகர் கோவில் அமைந்துள்ளது, கோவிலில் பரம்பரை அறங்காவலர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் ஆண்டுதோறும் ஒவ்வொருவராக மாறி மாறி அறங்காவலராக பொறுப்பேற்பது வழக்கமாக உள்ளது, இந்நிலையில் தற்பொழுது அறங்காவலராக பரணிதரன் பொறுப்பேற்பதற்காக சகோதர, சகோதரிகளிடம் கூறி சோலோச்சூர் முருகன் கோவிலுக்கு கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கோவிலுக்கு சென்றுள்ளார், அங்கு அவரை சகோதர சகோதரிகள் மற்றும் சிலர் சேர்ந்து கொண்டு பரணிதரனை தாக்கி திரைப்பட பாணியில் கோவில் ரூமில் அடைத்து வைத்து வாயில் துணியை கட்டியும், உடல் முழுவதும் இரும்பு கம்பிகளால் கட்டியும் அடித்து துன்புறுத்தி அறையனுள் பூட்டி சென்றுள்ளதாக கூறப்படுகிறது, பல மணி நேரம் போராடி பரணிதரன் தனது செல்போனில் நண்பருக்கு அழைத்து தகவலை கூறி அவர் துறையூர் போலீசாரிடம் கோவிலுக்கு சென்றுள்ளனர்,

அங்கு அவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு இடத்தை கண்டறிந்து அறையில் பூட்டி உள்ளே இருந்ததை கண்டறிந்தனர், நிகழ்விடத்தில் போலீசார் கைகளை கட்டி இருந்த கம்பிகளை அகற்றி அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, தொடர்ந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காதில் ரத்தம் வந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், தற்பொழுது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

இந்நிலையில் இன்றுவரை காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி பரணிதரன் புகாரை திருச்சி காவல் கண்காணிப்பாளரிடம் உறவினர்கள் மூலம் புகார் அளித்துள்ளார்,புகாரியில் மிகப்பெரிய கொடூர சம்பவம் நடந்தும் போலீசார் தன்னை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தும் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி பரணிதரனை கட்டிவைத்து துன்புறுத்தி தாக்கியதாக சகோதரன் கதிரவன், சகோதரி சந்தான லட்சுமி, பத்மப்ரியா மற்றும் ஹரிஷ், அருண், விஜய், மணிகண்டன் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனி அறையில் சிலர் அடித்து தாக்கி துன்புறுத்தி வாயில் துணியை கட்டியும் உடல் முழுவதும் கம்பியால் கட்டி இருந்தவரை மீட்ட துறையூர் போலீசார் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ள நிலையில் திருச்சி காவல் கண்காணிப்பாளர் இடம் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..தொடர்ந்து இதுபோன்ற அலட்சிய போக்கில் நடந்து கொள்ளும் காவல்துறையினரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…Ftp…19082026 KRR KLT Disabled Attake, Not Response Police News – Visual..

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments