Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

குப்பைகளை 4 வகையாக பிரிப்பது கட்டாயம் – திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் திரு. விர் பிரதாப் சிங் இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன்படி அனைத்துக் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்களால் உருவாகும் மாநகராட்சி திடக்கழிவுகளை மூலத்திலேயே ( உருவாகும் இடத்திலேயே) பின்வரும் நான்கு பிரிவுகளாகக் கட்டாயமாகப் பிரிக்க வேண்டும்.

ஈரக்கழிவு / மக்கும் கழிவு ( Wet Waste): சமையலறை மற்றும் உணவு கழிவுகள் காய்கறிகள், பழங்கள், இறைச்சிக் கழிவுகள், பூக்கள் கழிவுகள், தேயிலை தூள், காபித்தூள் முட்டை ஒடுகள் மற்றும் பிற எளிதில் மக்கும் (உயிரியல் சிதைவுக்குள்ளாகும் ) கரிமக் கழிவுகள் பச்சை வண்ணக் குறியீட்டுத் தொட்டிகள் ( டப்பாக்கள்) அல்லது பைகளில் தினந்தோறும், உலர்கழிவு / மக்காத கழிவு ( Dry Waste ) : காகிதங்கள், அட்டைகள் செய்திதாள்கள், புத்தகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், உலோகங்கள், கண்ணாடிகள் அட்டைப் பெட்டிகள், துணி வகைகள், பொதிப் பொருட்கள் ( Packaging Materials) மற்றும் பிற மறுசுழற்சி செய்யக் கூடிய மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை நீலம் வண்ணக் குறியீட்டுத் தொட்டிகள் ( டப்பாக்கள்) அல்லது பைகளில் தினந்தோறும்,

சுகாதாரக் கழிவுகள் ( Sanitary Waste ) : பயன்படுத்தப்பட்ட டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள் அல்லது நாப்கின்கள், டாம்பன்கள் ( Tampons), ஆணுறைகள், சிறுநீர்க் கசிவுத் தாள்கள் (Incontinence Pads) மற்றும் அதுபோன்ற பிற சுகாதாரக் கழிவுகளை சிவப்பு வண்ணக் குறியீட்டுத் தொட்டிகள் ( டப்பாக்கள்) அல்லது பைகளில் தினந்தோறும், சிறப்புக் கவனிப்பு கழிவு / வீட்டு அபாயகரக் கழிவு ( Special Care Waste – Domestic Hazardous Waste ) : கைவிடப்பட்ட வண்ணப்பூச்சு டப்பாக்கள் அல்லது பீப்பாக்கள், பூச்சிக்கொல்லி டப்பாக்கள் அல்லது கொள்கலன்கள், காலாவதியான மருந்துகள், உடைந்த பாதரச வெப்பமானிகள் மற்றும் பாதரசம் கெண்ட பிற பொருட்கள், கழிவு மின்கலன்கள் ( Batteries), பயன்படுத்திய அல்லது கழிவு ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகள், அசுத்தமான அளவீட்டுக் கருவிகள், வீட்டு மின்னணுக் கழிவுகள், (E-Waste) மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அவ்வப்போது அறிவிக்கப்படும் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2026ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட பிற வீட்டு அபாயகரக் கழிவுகளை கருப்பு வண்ணக் குறியீட்டுத் தொட்டிகள் ( டப்பாக்கள்) அல்லது பைகளில் வாரத்திற்கு ஒரு முறையும், ( ஒவ்வொரு புதன்கிழமை)

பதுமக்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட சேகரிப்பு நாட்களில், மூலத்திலேயே பிரிக்கப்பட்ட கழிவுகளை மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட வண்ணக் குறியீட்டுத் தொட்டிகளில் அல்லது பைகளில் அங்கீகரிக்கப்பட்ட வீடு வீடாகக் கழிவு சேகரிக்கும் பணியாளர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்னரே கழிவுகள் இவ்வாறாகப் பிரிக்கப்பட வேண்டும்.  வகை பிரிக்கப்படாத கலவை கழிவுகள் எக்காரணம் கொண்டும் சேகரிப்பு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அனைத்துக் கழிவு உற்பத்தியாளர்களும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் விதிமுறைகளுக்குக் கட்டாயம் இணங்கி நடக்க வேண்டும். என ஆணையர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அவர்கள் பொதுமக்கள் புதிய விதிகளை நடைமுறைபடுத்த தங்களின் மேலான ஒத்தழைப்பு வழங்கிடுமாறு மாநகராட்சி ஆணையர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *