Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 25.08.2026 அன்று உண்டியல் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி இந்து சமய அறநிலையத்துறை தக்கார்/இணை ஆணையர் சு.ஞானசேகரன், இணை ஆணையர்/செயல் அலுவலர் எம்.சூரியநாராயணன்,

மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் கே.அருட்செல்வன் மற்றும் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் வி.அய்யம்பாளையம் அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் பி.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், உதவி ஆணையர்/நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) வி.சுமதி, இத்திருக்கோயிலின் கண்காணிப்பாளர்கள்/செயல் அலுவலர்கள், மண்ணச்சநல்லூர் ஆய்வாளர் நா.சீனிவாசன், திருக்கோயில் பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் மற்றும் கொனலை இந்திரா செவிலியர் கல்லூரி மாணவிகளும் இதில் பங்கேற்றனர்.


நிரந்தர உண்டியல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற காணிக்கை விவரங்களின்படி, முதன்மை திருக்கோயிலில் ரொக்கமாக ரூ.1,39,57,585, அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.7,91,074, அருள்மிகு உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோயிலில் ரூ.15,686 மற்றும் அருள்மிகு போஜீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.3,398 வசூலாகியுள்ளது. இதுதவிர 1 கிலோ 733 கிராம் பொன் இனமும், 2 கிலோ 384 கிராம் வெள்ளி இனமும் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் 187 அயல்நாட்டு ரூபாய் நோட்டுகளும் 1129 அயல்நாட்டு நாணயங்களும் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன் இறுதியாக 11.08.2026 அன்று உண்டியல் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *