பட்டதாரி ஆசிரியரிடம் ரூ.10,000/- லஞ்சம் பெற்ற மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் கண்காணிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு திரு. ப.கண்ணன், பட்டதாரி ஆசிரியர், அரசு (ஆ.தி.தி.) உயர்நிலைப் பள்ளி, பாலகிருஷ்ணம்பட்டி, துறையூர் வட்டம், திருச்சி மாவட்டம் என்பவர் மீது குற்ற வழக்கில் நிலுவையில் இருந்து மருத்துவ விடுப்பு முடித்து பணியினை நீக்கம் செய்யாமல் மீண்டும் பணியில் சேர ஆணை வழங்க ஏற்பாடு செய்து தர ரூ.10,000/- கையூட்டாக கேட்டு தொடர்பாக திருச்சி மாவட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கண்காணிப்பாளர் எதிரி-1 திரு. சந்திரசேகரன் மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எதிரி-2 திரு. தேவதாஸ் ஆகியோர் மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி ஊ.த.க பிரிவில் குற்ற வழக்கு 2009 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் திரு. கண்ணனிடம் கையூட்டு பணம் ரூ.10,000/-ஐ கேட்டு பெற்ற போது எதிரிகள் இருவரும் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டனர்.மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று இன்று 28.08.2026 திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு. புவியரசு அவர்கள், எதிரி-1 திரு. சந்திரசேகரன் மற்றும் எதிரி-2 திரு. தேவதாஸ் ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,000/- அபராதமும் விதித்து, அபராதத்தை கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறைத் தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.17 ஆண்டுகள் கழித்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கினை திருமதி. F. சேவியர் ராணி, காவல் ஆய்வாளர், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அவர்கள் திறம்படச் செய்து, ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக திரு. கோபிகண்ணன் அவர்கள் சிறப்பாக வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments