திருச்சி போதாவூர் கிராமத்தைச் சேர்ந்த சரிதா இவரது கணவர் முருகபாண்டியன். இருவருக்கும் இடையே தொடர்ந்து வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் குடிபோதையில் வந்த முருகபாண்டியன் பிரச்சினை செய்ததால் மனமுடைந்த சரிதா தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 இதில் மூன்று வயது பெண் குழந்தை இனியா மற்றும் ஆறுமாத குழந்தை கவிகாஸ்ரீ ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சரிதாவுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

 இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

 30 Oct, 2025
30 Oct, 2025                           132
132                           
 
 16 August, 2021
 16 August, 2021

Comments