Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இன்று (12.09.2021) கொரோனா தடுப்பூசி போட்டு 2500 மதிப்புள்ள பரிசு பொருட்கள் பெறலாம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 
தமிழகமெங்கும் 12.09.2021 இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டத்தில் சுமார் 650 தடுப்பூசி முகாம்கள் நடத்தி 1,37,500 மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள மாபெரும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் 25000 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் 4 நபர்களுக்கு முதல் பரிசாக 8000 மதிப்புள்ள பட்டுப்புடவை, இரண்டாம் பரிசாக 8 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், மூன்றாம் பரிசாக 3 ஆயிரம் மதிப்புள்ள ட்ரிபிள் பர்னர் கேஸ் அடுப்பு, நான்காம் பரிசாக ரூபாய் 2500 காண ஐந்து நபகளுக்கு இரவு உணவு வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *