நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, சவகர்லால்நேரு, 
அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர்
கலைஞர் ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய
தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் அவர்களின் பிறந்த நாளினை
 திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி
திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி
மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் தமிழ்வளர்ச்சித் துறையில் 
நடத்தப்பெறவுள்ளன. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/ – என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றும் வழங்கப்பெறவுள்ளன.
 இவை அல்லாமல் அரசுப் பள்ளி
இவை அல்லாமல் அரசுப் பள்ளி
மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2000- வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்பெறவுள்ளது. போட்டி நடைபெறுமிடம், நாள், நேரம், விதிமுறைகள் குறித்து பள்ளி, 
கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்படும்.
 கொரோனா தீநுண்மி நோய்த் தொற்று தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியுடனும் போட்டிகள் நடத்தப் பெறும். இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

 30 Oct, 2025
30 Oct, 2025                           126
126                           
 
 25 September, 2021
 25 September, 2021

Comments