Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

விமானநிலைய விரிவாக்க பணிக்கு இடையூறாக இருக்கும் குடியிருப்பு பகுதியினை அகற்றப்படும் – திருச்சி விமானநிலைய குழு கூட்டத்தில் முடிவு

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் (Aerodorme Committee Members) கூட்டம் 04.10.2021 இன்று விமானநிலைய குழுவின் தலைவர் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் பு.கார்த்திகேயன் தலைமையில், விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் நடத்தப்பட்டது.

இந்த குழுவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு குழு, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு பணியகம், திருச்சி, மக்கள் தொடர்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் தலைமையேற்ற விமானநிலைய குழு உறுப்பினர் தலைவர், பாதுகாப்பு கருதி அடிப்படை தேவைகள் மற்றும் தொழிநுட்ப விபரக்குறிப்பு, தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஒத்திகை, விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரம் ட்ரோன் பறப்பதற்கு தடைசெய்யப்பட்ட பகுதி என்பது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட விபத்துக்கள் போன்று எவ்வித விபத்துக்கள் ஏற்படா வண்ணம் ட்ரோன் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை தக்க உபகரணங்களுடன் எதிர்கொள்வது பற்றியும், விமானநிலைய விரிவாக்க பணிக்கு இடையூறாக இருக்கும் அம்பேத்கர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியினை அப்புறப்படுத்தவும்,

அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் குடிசை மாற்று வாரியம் மூலமாக உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து தருவது குறித்தும், தேசிய நெடுஞ்சாலை 210 விமான ஒடுதளத்தில் அருகாமையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி தரைவழிப்பாலம் அல்லது சாலையின் உயரத்தை குறைப்பது பற்றியும், விமான கடத்தல் ஒத்திகையின் போது தேசிய பாதுகாப்பு குழுவினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களையும் வைத்து ஒத்திகை செய்வது என்றும், கடந்த கூட்டத்தில் கண்காணிப்பு கேமரா அதிகமாக வெளிப்பகுதிகளில் அமைத்தால் கடத்தல் செய்பவருக்கும், கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவரையும் எளிதில் கண்காணித்து கடத்தலை தடுக்க முடியும் என்று வெளியே வாகன நிறுத்துமிடங்களில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும்

உதவி ஆணையர், பொன்மலை சரகம் அவர்கள் விமானநிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், வெளியே குடியிருப்பு பகுதிகளில் வெளியாட்கள் எவரேனும் தங்கியுள்ளார்களா என்று சோதனை செய்தும், டிரோன் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியும், 
விமானநிலையத்தின் நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் பகுதியில் காவலர் சாவடி அமைப்பது பற்றியும் விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *