கல்லூரி மாணவன் தற்கொலை – புகார் ஏற்க மறுத்த காவல்துறை- மாணவர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

கல்லூரி மாணவன் தற்கொலை – புகார் ஏற்க மறுத்த காவல்துறைக்கு எதிராக மாணவர்கள் சாலை மறியல் -கல்லூரி காப்பாளரே கைது செய்யாவிட்டால் தொடர் போராட்டம் மாணவர்கள் எச்சரிக்கை -சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் வசித்து வந்த மாணவன் அபிஷேக் தூக்கு மாடி தற்கொலை செய்த சம்பவம் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.அபிஷேக் கைபேசியை உடைத்ததாகவும், கல்லூரி கட்டணம் நிலுவையில் இருப்பதால் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அபிஷேக் விடுதிக்குள் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட உறவினர்கள், அபிஷேக் இறப்பில் மர்மம் உள்ளது எனக் கூறி, திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகத்தையும் விடுதி காப்பாளரையும் எதிர்த்து புகார் அளிக்க முயன்றனர். ஆனால், புகாரை காவல்துறையினர் ஏற்க மறைத்தனர்.
இதனை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், மாணவர்களும், திருச்சி அரசு மருத்துவமனை நுழைவாயிலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.கல்லூரி நிர்வாகம் மற்றும் விடுதி காப்பாளரே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் தொடர்ந்தும் போராட்டத்தில் இறங்குவோம் எனக் கூறி ஆவேசமாகப் கோஷம் விட்டனர்.இதனால் திருச்சி அரசு மருத்துவமனை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






