6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி - முதல் பரிசு 10000

Jun 27, 2025 - 19:15
Jun 28, 2025 - 08:28
 0  14.4k
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி - முதல் பரிசு 10000

அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினை "தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் என்பதை தெரிவிக்கும் வகையில் "தனித்துவ தமிழ்நாடு" என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967 ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டு தோறும் ஜுலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டுமென் தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார். இதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்  6ஆம்வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 04.07.2005 அன்று காலை 00.30 மணி முதல் திருச்சிராப்பள்ளி. சத்திரம் இ.ஆர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளன.

மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி "ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம்"எனும் தலைப்பிலும், பேச்சுப்போட்டி "1) அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு, 2) கடமை, கண்ணியம், கட்டுபாடு 3) தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு "4) இக்காலத்தில் ஆட்சிமொழி எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவரால் முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பரித்துரைக்கப் பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இப்போட்டிகள் தொடர்பில் கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு 0431-24011031 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000/- இரண்டாம் பரிசு ரூ.7,000/-, மூன்றாம் பரிசு ரூ.5,000/- என்ற வகையில் காசோலைப் பரிசுகள், வழங்கப்பட உள்ளது. என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வே சரவணன் அவர்கள்   தெரிவித்துள்ளார் 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய...

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 20
Dislike Dislike 4
Love Love 6
Funny Funny 2
Angry Angry 4
Sad Sad 3
Wow Wow 14