பல கோடி மதிப்புள்ள மாநகராட்சி இடத்தை வளைத்து போட முயற்சி - பொதுமக்கள் தடுத்து போராட்டம்

Jun 26, 2025 - 15:31
Jun 26, 2025 - 15:33
 0  2.4k
பல கோடி மதிப்புள்ள மாநகராட்சி இடத்தை வளைத்து போட முயற்சி - பொதுமக்கள் தடுத்து போராட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே புலிமண்டபம் பகுதியில் உள்ளது.அதில்மண்ணச்சநல்லூர் வணிக வைசிய சங்கத்திற்கு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் திருப்பள்ளி ஓடம் திருநாள் யானை வாகனத்தில் புறப்பாடு நடத்தப்படும் அன்று ஒரு நாள் மட்டும் வணிக வைசிய சங்கத்திற்க்கு அனுமதி வழங்கப்பட்டது.

75 ஆண்டுகால அரசு பள்ளிக்கு அருகாமையில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தை உள்ளூர் ஆளும் கட்சி பிரமுகருடன் தனியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்ய தடுப்புச் சுவர் எழுப்பிக் கொண்டிருந்தனர். அதனை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் முதல்வரின் தனிப்பிரிவு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆவணங்களுடன் கடிதங்களை அனுப்பினர் தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்திற்க்கு வந்தனர்.

பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். புலி மண்டபம் பகுதியில் மண்டபத்தை ஒட்டி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது பள்ளி கட்டடத்தின் மதில் சுவர் அருகே மண்டபத்திற்கு ஒட்டி உள்ள ஐயாயிரம் சதுர அடி நிலத்தை ஆக்கிரமிக்க தான் இவ்வளவு நடவடிக்கையும் ஒரு நாள் மண்டபத்தில் பெருமாள் வீட்டிற்கு அனுமதி கேட்டவர்களுடன் இந்த செயலில் ஈடுபட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

கட்டியுள்ள மதில் சுவரையும் இடிக்காமல் அதிகாரிகள் வந்து ஆவணங்களை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். ஒட்டு மொத்தத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஆட்டையை போட முயன்று தற்பொழுது பொதுமக்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைவிட முக்கியமாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது அதற்கான ஆவணங்கள் உள்ளது என்று உறுதியான தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இத்த தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சி பிரமுகரை அழைத்து செம டோஸ் விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது அந்தப் பகுதியில் சதுர அடி பத்தாயிரம் ரூபாய் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like -74
Dislike Dislike 2
Love Love 3
Funny Funny 0
Angry Angry 3
Sad Sad 0
Wow Wow 1