அனுமதியின்றி வைக்கப்பட்ட வெடி சாலையில் சிதறிய பாறைகள் உயிர் தப்பிய மாணவர்கள்

முசிறி அருகே கட்டிடப் பணிக்காக வெடிவைத்து தகர்த்ததில் சாலையில் பள்ளம். அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் காயம் இன்றி காயமின்றி உயிர் தப்பினர்.
முசிறி அருகே சாலையோரம் அரசு அனுமதி இல்லாமல் வெடி வைத்து வெடித்ததில் சாலையில் அதிகளவில் பாறாங்கற்கள், விழுந்து சாலை பள்ளமாகியது. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர். பாறைகள் சாலையில் விழுந்து பெரும் பள்ளம் ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு..
திருச்சி மாவட்டம், முசிறி அருகே புலிவலம் செல்லும் சாலையில் ஆணைப்பட்டி பகுதியில் சுமார் 25 ஏக்கரில் தனியார் தொழிற்சாலை அமைப்பதற்காக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் நேரத்தில் அரசு அனுமதி பெறாமல் சாலையின் அருகே வெடி வைத்து
பாறை வெடித்ததில் சுமார் இரண்டு டன்னுக்கு மேலான பாறைகள் பொதுமக்கள் செல்லும் சாலையில் விழுந்து, சாலையில் பெரும் பள்ளத்தை ஏற்படுத்தி உள்ளது,அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட அதிர்ஷ்டவசமாக எந்த காயமுமின்றி உயிர் தப்பினர், சாலையில் பாறை கற்கள் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் கற்கள் விழுந்து வீட்டில் மேற்கூரைகள் உடைந்து,
வீட்டில் உள்ளே விழுந்து உள்ளது, வீட்டில் விழுந்த நேரத்தில் யாரும் இல்லாததால் அவர்களும் உயிர் தப்பினர், பகலில் பாறையை உடைக்கும் பணியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதோடு, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது,
வெடி எங்கிருந்து வாங்கப்பட்டது, அரசு அனுமதி பெற்றுள்ளனரா என முசிறி போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்
What's Your Reaction?






