சிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின் ஸ்வீட்ஸ் குழுமத்தின் மறுபக்கம் இது!

சிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின் ஸ்வீட்ஸ் குழுமத்தின் மறுபக்கம் இது!

தீபாவளி கொண்டாட்டத்திற்காக நாடு முழுவதும் தயாராகிவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 7 மாதங்களுக்கு பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது இந்த தீபாவளி பண்டிகைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைளோடு பொதுமக்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். தீபாவளி என்றாலே சட்டென நினைவுக்கு வருவது பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் தான். அன்பினை வெளிக்கொணர்ந்து ஒரு முழு விழாவாக மாற்றுவது இனிப்புகள் மட்டும்தான்!

Advertisement

பக்கத்து வீட்டுக்காரர் கூட சண்டை என்றாலும் பாசத்துடன் கொடுக்கும் இனிப்பு, பகையை தூக்கியெறிய செய்கிறது. மகிழ்ச்சியான தருணங்கள் ஒவ்வொன்றிலும் விருந்தினராய் பங்கேற்கின்றனர் இந்த இனிப்புகள். அப்படிப்பட்ட இதயத்திற்கு இதமுட்டும் ஒரு இனிப்பினை பெரம்பலூர் மட்டுமல்லாது திருச்சி, சென்னை மற்றும் சேலம் ஆகிய மாநகரங்களில் மக்களை கவர்ந்த ஒரு இனிப்பு தான் இது! ஆமாங்க "நம்ம அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் தான்"

ஒரு நிறுவனம் என்பது அதனை சார்ந்த சுவை மற்றும் தரம் மக்களின் மனதை அள்ளியதாக இருந்தாலும் அவர்களின் மறுபக்கத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரம் இது! அஸ்வின்ஸ் குழுமத்தின் சார்பாக இந்த இக்கட்டான ஒரு சூழ்நிலையில் திருச்சியில் உள்ள சுமார் 100 சிறப்பு குழந்தைகளை தத்தெடுத்து இனிப்புகள் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு தான் இது!

தீபாவளி கொண்டாட்டம் என்பது ஒரு மறக்கமுடியாத நாள் பல அனுபவங்களை கற்றுத் தரும் நாள். குடும்பத்தோடு சேர்ந்து குதுகலிக்கும் நாள். ஆனால் திருச்சியில் பல இடங்களில் தாய் தந்தை இழந்து, பேசமுடியாத மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நிலைமையை நினைத்துப் பார்த்தால் கண்ணீர் மட்டும்தான் மிஞ்சும். ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் நாங்கள் இருக்கிறோம் என்ற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி தீபாவளிக்கு முன்னதாகவே சிறப்பு குழந்தைகளுக்காக களமிறங்கி விட்டது அஸ்வின் ஸ்வீட்ஸ்!

திருச்சியில் உள்ள சிறப்பு விடுதிகளில் சிறப்பு குழந்தைகளுக்காக அஸ்வின் ஸ்வீட்ஸ் குழுமம் சார்பாக இனிப்புகள், கார வகைகள் மற்றும் பட்டாசுகளை வழங்கி குழந்தைகளோடு நேரம் செலவிட்டு வருகின்றனர். திருச்சியில் பயிலும் இந்த சிறப்பு குழந்தைகளின் பிறந்த நாள் அன்று அஸ்வின் ஸ்வீட்ஸ் குழுமம் சார்பாக அவர்களுக்கு இலவசமாக கேக் செய்து பிறந்தநாளில் சொல்லனா சந்தோஷத்தில் அக்குழந்தைகளை ஆழ்த்தி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் அடுத்தகட்டமாக திருச்சியிலுள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என இந்த இக்கட்டான சூழ்நிலையில் களத்தில் நின்று பணியாற்றியவர்களுக்கு தங்களின் இனிப்புகளால் இந்த தீபாவளி தினத்தை கொண்டாட காத்திருக்கின்றனர்.

2003ம் ஆண்டு பெரம்பலூரில் தொடங்கி அதே வீட்டு பக்க்ஷணத்தோடு இன்றளவும் 5 மாவட்ட மக்களின் நாவினை சுவையால் கட்டிப் போட்டுள்ளனர் என்றால் அது மிகையாகாது. உயர்தர மிக்க இனிப்பு வகைகளை பொதுமக்களுக்கு வழங்குவதோடு நின்றுவிடாமல் யாரும் அறியாத அஸ்வின்ஸ் ஸ்விட்ஸ் மறுபக்கத்தை அறியும் போது நெகிழ வைக்கிறது. இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு குழந்தைகளோடு கொண்டாடும் அஸ்வின் ஸ்வீட்ஸ் என்றுமே கிரேட் தாங்க!