வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்வையாளர்கள் மனதை கவரும் எலக்ட்ரானிக் வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்வையாளர்கள் மனதை கவரும் எலக்ட்ரானிக் வண்ணத்துப்பூச்சி

திருச்சியில் சுற்றுலா தளங்களில் இன்றைக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக வண்ணத்துப்பூச்சி பூங்கா மாறி உள்ளது.

இயற்கை அழகு மிகுந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆராய்ச்சி மற்றும் சுற்றுலாவுக்காக அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர்.

ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர் நடுக்கரை கிராமத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் வனத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது பசுமையாக காட்சியளிக்கும் இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு ஆராய்ச்சியாளர்கள்,சுற்றுலாப் பிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், குழந்தைகளோடு குடும்பம் என அனைத்து தரப்பினரும் வர இது ஒரு முழுமையான சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

பூங்காவில் பசுமையான செடிகள் பட்டாம்பூச்சி வகைகள் அவற்றின் பெயர்கள் என பார்வையாளர்களுக்கு தகவல் தெரிந்து கொள்ளும் வகையில் பதாகைகள் வைத்திருக்கிறார்கள்.

வண்ணத்துப்பூச்சி பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள்,செயற்கை குடில்கள், செயற்கை நீரூற்றுகள், சிறு மரங்கள் பல்வேறு வகையான தாவர வகைகளில் உள்ள நட்சத்திர வனம் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விளக்கும் காட்சி கூடம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்களை கவரும் வண்ணம்,

வண்ணத்துப்பூச்சி பூங்காவை இன்னும் அழகாக மாற்றிட திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் அறிவுறுத்தலின்படி மாவட்ட வன அலுவலர் வழிகாட்டலில் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்வையாளர்கள் கவரும் வண்ணம் புதிதாக கை அசைவுக்கு ஏற்ப சிறகுகள் விதிக்கும் வகையில் சென்சாரில் இயங்கும் எலக்ட்ரானிக்ஸ் தேனி மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்சார் மூலம் இயங்கும் தே எலக்ட்ரானிக் தேனி மற்றும் நீலமயில் அழகான இசை மஞ்சளழகி இனங்களைச் சேர்ந்த எலக்ட்ரானிக் வண்ணத்துப்பூச்சிகள் பொருத்தப்பட்டு வருகின்றது.

வண்ணத்துப்பூச்சி என்றால் யாருக்குதான் பிடிக்காது !

வளர்ந்த பின்னரும் அனைவரையும் ரசிக்கும் பட்டாம்பூச்சியை பார்த்து ரசிக்க எப்போதும் நாம் தவறுவதே இல்லை வண்ணத்துபூச்சி பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மன மகிழ்ச்சியோடு திரும்பிச் செல்கின்றனர்..

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn