17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விவசாய சங்கங்கள் திருச்சி ரயில்வே சந்திப்பில் பேரணியாக வந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு!தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு ஏறி, குதித்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயில் மறியல்
தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






