திருச்சி வன உயிரியல் பூங்கா அமைப்பதற்கான பணிகள் அடுத்த நிதியாண்டில் துவங்க வாய்ப்பு
திருச்சி – சென்னை சாலையில், எம்.ஆர். பாளையம் பகுதியில் வன உயிரியல் பூங்கா அமைப்பதற்கான மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்து உள்ளது. இந்நிலையில், இந்த உயிரியல் பூங்கா பணிகளை, அடுத்த ஆண்டு துவங்குவதற்கு ஏதுவாக, வனம் சாரா பணிகளுக்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை, வனத்துறையினர் துரிதப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் ஐந்தாவது வன உயிரியல் பூங்காவை நிறுவுவதற்கான மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் ஒப்புதலை மேற்கோள் காட்டி உள்ள தலைமை வனவிலங்கு பாதுகாவலர் ஷேகர் குமார் நீரஜ் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், அரசு, அடுத்த ஆண்டில் இதற்கான பணிகளை துவங்க உள்ளது. இதற்கான துல்லியமான திட்டத்தை துவங்க இருப்பதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த திட்டம், 10 ஆண்டுிகளுக்கு முன் முந்தைய திமுக அரசின் ஆட்சிக்காலத்தின் போது முன்மொழியப்பட்டது. இதற்கு வனப் பாதுகாப்புச் சட்டம் 1980இன் கீழ், காப்புக்காடு பகுதியில், வனச்சாரா செயல்பாடுகளுக்காக, வனத்துறையின் அனுமதி தேவைப்பட்டது.
திருச்சி வட்ட தலைமை வனப் பாதுகாப்பாளர் என். சதீஷ் கூறியதாவது, இந்த திட்டத்திற்கான பணிகள், 2022 -23ஆம் நிதியாண்டில் துவங்கும். இந்த வன உயிரியல் பூங்கா செயல்படும் பட்சத்தில், இது திருச்சி மட்டுமல்லாது, பெரம்பலூர் பகுதி மக்களுக்கும் முக்கிய கல்வி மற்றும் பொழுதுபோக்கு இடமாக விளங்கும். இந்த திட்டப்பணிகள் விரைவில் துவங்கும். மத்திய வன உயிரியல் பூங்கா ஆணையத்திடம், இதுகுறித்த ஆவணங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
எம்.ஆர் பாளையம் காப்புக் காடுகள் பகுதியில், மான்கள் மற்றும் பாலூட்டிகள் அதிகம் உள்ளன. இதன்காரணமாகவே, இந்த பகுதியில் வன உயிரியல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், இங்கு இருக்கும் விலங்குகளுக்கு போதுமான அளவில் நன்னீர் கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்து உள்ளது. 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு தேவையான அளவில், இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உள்ளதாக, சதீஷ் தெரிவித்து உள்ளார்.
2017ஆம் ஆண்டில் வனத்துறை சார்பில், ரூ. 2.3 கோடி செலவழிக்கப்பட்டு 5 இடங்களில் போர்வெல்கள் அமைக்கப்பட்டதுடன், 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. பூங்காவின் நுழைவுப் பகுதியில் வளைவு, சுற்றிலும் வேலி, சித்திர வகையிலான தகவல் பலகைகள் அமைக்கப்பட்டு இருந்ததை, சதீஷ் நினைவுகூர்ந்தார். இந்த வன உயிரியல் பூங்காவை, வனத்துறை, ரூ. 8 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிட்டு உள்ளது.
இந்த 5 போர்வெல்களில் இருந்து எடுக்கப்படும் நீர், இந்த திட்டத்திற்கு போதுமானதாக இருக்கும். மேலும் தேவைப்பட்டால், அருகில் பாயும் உப்பாறு ஆற்றில் இருந்து நீர் பெறப்பட்டு, அதை நீர்த்தேக்க குளங்களில் சேமித்து பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சதீஷ் தெரிவித்து உள்ளார்.
இந்த பகுதியில் அடர்த்தியாக வளர்ந்து உள்ள ஆச்சா மரங்கள் (Hardwickia Binata) மரங்கள், வேறு வகை தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கும் திறன் கொண்டதாக உள்ளது. எனவே மற்ற வகை தாவரங்களின் வளர்ச்சியையும் இந்த பகுதியில் மேம்படுத்துவதற்காக, ஆச்சா மரங்களை, அங்கிருந்து அகற்றப்பட இருப்பதாக, ஷேகர் குமார் நீரஜ் குறிப்பிட்டு உள்ளாஇதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் வன உயிரியல் பூங்காவிற்கான, விலங்கு சேகரிப்பு திட்டத்தை வகுக்க உள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய...