திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் காவல் நிலையம் அருகே வெள்ளைநிற கார் ஒன்று பதிவு எண் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கார் துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவரிகளின் கார் இல்லை என்பதால் மர்ம கார் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அந்த காரில் மர்ம பொருள் ஏதும் உள்ளதா அல்லது காரை திருடிவிட்டு இங்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு சென்றார்களா என்று பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கார் காணாமல் போனதாக கூறப்படும்
நிலையில் அவருடைய காராக இருக்குமா என கரூர் மாவட்ட காவல்துறையினர் துவரங்குறிச்சி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்
வரவழைக்கப்பட்டு சோதனை செய்து தடையுங்கள் சேகரிக்கப்பட்டன.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்ம காரால் துவரங்குறிச்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments