திருச்சி ஜி. வி. என் ரிவர்சைடு மருத்துவமனையின் புதிய அங்கமாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நவம்பர் 21ஆம் தேதி இரண்டு ஆண்டுகளாக சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு தொடர் இரத்த சுத்தகரிப்பு செய்து வந்த 42 வயது நோயாளிக்கு ஜி. வி. என் ரிவர்சைடு மருத்துவமனையில், முதலாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.


சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் M.சந்தோஷ் குமார் M.S.,M.Ch, DNB, FMAS., FIAGES, சிறுநீரக மருத்துவர் M.மைவிழி செல்வி MD, DM, DNB,. மயக்கவியல் மருத்துவர் V.M.கார்த்திக் MD, DA, DNB, FIPM, ஆகியோர் தலைமையில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. மருத்துவமையின் இயக்குனர் Dr.S.கவிதா செந்தில் (DGO), நோயாளிக்கு பூங்கொத்து கொடுத்து, மேலும் குணமடைய வாழ்த்தி வழி அனுப்பினார்.

இந்த நிகழ்வின்போது நிர்வாக இயக்குனர் Dr. வி. ஜெ. செந்தில் M.S., (ORTHO) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி DR. சக்தி யாதவ் MD, M.S, நிர்வாகத்தினர், செவிலியர்கள், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments