சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சண்முகநாதபுரம் வெங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து கருப்பன் (48). இவர் தனது பெயரை முருகன் என மாற்றி திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகர் முகவரியில் போலி கடவுச்சீட்டு பெற்றுள்ளார்.
பின்னர் அந்த கடவுச்சீட்டு மூலமாக திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்ல முயற்சி செய்தார். அப்போது அவரது கடவுச்சீட்டை திருச்சி விமான நிலைய பரிசோதனை அதிகாரி மெய்யப்பன் விசாரணைக்கு உட்படுத்தினார்.
இதில் போலி பாஸ்போர்ட் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை பிடித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் முத்துக்கருப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments