திருச்சி மாவட்டம் ஆளுந்தூர் பகுதியில் தானா முளைத்த முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது
ஜல்லிக்கட்டு போட்டியினை ஸ்ரீரங்கம் பொறுப்பு தாசில்தார் தமிழ்செல்வி தொடங்கி வைத்தார்
600 ஜல்லிக்கட்டு காளைகள் 750 மாடு பிடி வீரர்கள் பங்கேற்று தற்போது களம் கண்டு வருகின்றனர்
சிறந்த மாடுபிடி வீரருக்கு பைக், மற்றும் சிறந்த காளைக்கு பீரோ கட்டில் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது
ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து
ஜல்லிக்கட்டு காளைகள் களம் கண்டு வருகிறது,
இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளை ஒன்றும் கொம்பில் மல்லிகைப்பூ சுற்றி வந்த நிலையில் அதனை வீரர்கள் அடக்க முயற்சி செய்தனர் அப்போது அந்த ஜல்லிக்கட்டின் காளை வீரர்களை புரட்டி எடுத்து கதி கலங்கச் செய்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments