திருச்சி அருகே நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து - 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்!!

திருச்சி அருகே நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து -  3 பேர் பலி, 4 பேர் படுகாயம்!!

This image has an empty alt attribute; its file name is IMG-20201003-WA0159-300x173.jpg

சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் பிரபு, பழனிச்சாமி, கோபால் , பிரபாகரன் உள்ளிட்ட 7 பேரும் கும்பகோணத்தில் உள்ள இவர்களது நண்பரொருவர் இறந்துவிட்டதாக அதற்கு துக்கம் விசாரிப்பதற்காக இவர்கள் ஏழு பேரும் சொகுசு கார் ஒன்றில் நேற்றிரவு சேலத்தில் இருந்து கும்பகோணம் புறப்பட்டனர்.

கார் திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த உமையாள்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சதீஷ்குமார், பிரபு, பாலு (எ) பழனிச்சாமி மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். கோபால் பிரபாகரன் ராஜலிங்கம் மணி நால்வரும் பலத்த காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுகுறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டி வந்த பிரபு மது போதையில் இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.தற்போது சம்பவ யிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

https://youtu.be/Jvx_Piv60ks
Advertisement