ஓதுவார் பயிற்சி பள்ளியில் மூன்று ஆண்டுகள் முழு நேரம் மற்றும் நான்கு ஆண்டுகள் பகுதி நேரம் சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்து மதத்தை சேர்ந்த கீழ்காணும் தகுதிகள் உடையவர்களிடமிருந்து, உரிய புகைப்படத்துடன் கூடிய சான்றாவணங்களுடனும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் விண்ணப்பதாரர் கையொப்பத்துடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் எதிர்வரும் 10.09.2025-ன் தேதி மாலை 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
பள்ளிக் கல்வியில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
13 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
நல்ல குரல்வளம் பெற்றிருக்க வேண்டும்.
இந்து சைவ சமயக் கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.
முழு நேரம் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.10000/- (பத்தாயிரம் மட்டும்) ஊக்கத் தொகை, உணவு, உடை, தங்கும் இடம், மருத்துவ வசதி திருக்கோயில் மூலம் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
பகுதி நேரம் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.5000/- (ஐந்தாயிரம் மட்டும்) ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
சான்றிதழ் படிப்பு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் உள்ள ஓதுவார் பணிக்கு தகுதியுடையது.
ஓதுவார் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஓதுவார் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
சேர்க்கை படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில், அலுவலக நேரங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கீழ்காணும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://samayapurammariamman.hrce.tn.gov.in/
விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621112
தொடர்புக்கு
Mail ID : jceotry_25704.hrce@tn.gov.in ;symmariamman@gmail.com
தொலைபேசி எண் : 0431-2670460, 8012012087, 7010244199
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments