திருவெறும்பூர் தொகுதியில் பொன்மலை பகுதி மக்களுக்காக அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையுடன் இனைந்து மருத்துவ முகாமினை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துவக்கி வைத்தார்.
பொன்மலை மேலகல்கண்டார்கோட்டைபகுதியில் இம்முகாம் நடைபெற்று வருகிறது இம்முகம்மிணை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் முகாமில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் சரிபார்த்தல், இசிஜி எடுத்தல், நுரையீரல் பரிசோதனை நடைபெறுகிறது பொது மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுகிறது .
முகாமில் அன்பில் அறக்கட்டளையின் சார்பாக முதலுதவி பெட்டி வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்
மு.மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ் மாமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் சீதாலட்சுமி முருகானந்தம். பியூலா மாணிக்கம். மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாம்

Comments