திருச்சிராப்பள்ளி மாவட்டம், ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கனூர் கிராமத்தில் உள்ள குமரன் பேக்கரி அருகே கடந்த 21.07.2025-ஆம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த முகேஷ் வயது 51, த.பெ. பிரகாஷ், மலைப்பட்டி, ராம்ஜிநகர் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றப்பட்டு அவர் மீது திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு குற்ற எண். 203/25 U/s 8(c) r/w 20(b)(ii)(B) of NDPS Act ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும், புங்கனூர் சாய் நகர் அருகே கடந்த 23.07.2025-ஆம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஞானப்பிரகாசம் வயது 40, த.பெ. இடும்பன், புது காட்டூர், புங்கனூர் என்பவரை கைது செய்து திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு குற்ற எண். 205/25 U/s. 8(c) r/w 20(b)(ii)(B) NDPS Act என்ற வழக்கும், அதே போன்று ராம்ஜிநகர் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே கடந்த 27.07.2025-ஆம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ரமணி வயது 59, த.பெ. மதிவாணன், காந்தி நகர், ராம்ஜிநகர் என்பவரை கைது செய்து திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு குற்ற எண். 210/25 U/s 8(c) r/w 20(b)(ii)(B) of NDPS Act என்ற வழக்கும் பதிவு செய்து, இருவரிடமிருந்து 3.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.
மேற்படி மூன்று கஞ்சா வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் குற்றவாளிகளான முகேஷ், ஞானபிரகாசம் மற்றும் ரமணி ஆகியோர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 18.08.2025-ஆம் தேதி சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 72 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments