திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம் 2025- 2026ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் “டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது” ஆதிதிராவிடர் நல மக்களின் முன்னேற்றத்திற்காக, தங்களை இணைத்து கொண்டு அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் “டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி” தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
2025ஆம் ஆண்டிற்க்கான டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது 2026ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பட இருப்பதால் 2025-2026ஆம் ஆண்டிற்க்கான “டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது” பெற விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதற்கான உரிய விண்ணப்பத்தினை https://cms.tn.gov.in/cmsmigrated/document/forms/annalambedkar_award_appInform_t_290824.pdf (or)
https://tinyurl.com/ambedkaraward
என்ற
இணையத்தளத்திலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அனுகி பெற்று கொள்ளுமாறும் பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய முன்மொழிவுகளை 15.10.2025-க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments