தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான பொது தேர்வு 2023-ஆம் ஆண்டிற்கான தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு, இன்று (27.11.2024)- ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் பணி நியமன ஆணை வழங்கினார்.
அப்போது, கானொலி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ம.மனோகர், காவல்துறைத் துணைத்தலைவர், திருச்சி சரகம் அவர்களால் 50 காவலர்களுக்கும், 19 தீயணைப்பாளர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
மேற்படி பணி நியமான வழங்கும் போது டாக்டர்.வீ.வருண்குமார், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,ஆனந்த், தளவாய், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை முதலாம் அணி மற்றும் முத்துப்பாண்டி, மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி, ஆகியோர் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments