சமீபகாலமாக காவல்துறையில் உயர் அதிகாரிகள் சக காவலர்களை திட்டி மிரட்டும் ஆடியோவில் ஆகி வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்சியிலும் ஒரு ஏ.ஆர் ஓட்டுநர் கொசுவலை பயன்படுத்திய காக அதிகாரி திட்டும் வீடியோ வாக்குவாதம் காட்சி வைரல் ஆகி வருகிறது.
திருச்சியில் நேற்று சுதந்திர தின விழா சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது இதற்கான பாதுகாப்பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர், இந்நிலையில் அதிகாலை பணியில் இருந்த ஏ.ஆர். ஓட்டுனர் ஒருவர் கொசுவலை பயன்படுத்தினார் இதனைப் பார்த்த ஏசி ஜான் கென்னடி ஏ.ஆர் ஓட்டுனரை திட்டியதாக கூறப்படுகிறது.
அதற்கு ஏஆர் ஓட்டுநர் பதிலுக்கு பதில் பேசிய காணொளி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி உள்ளது.
பணி நேரத்தில் கொசு வலை பயன்படுத்தி ஏ ஆர் ஓட்டுநர் அமர்ந்து இருந்தார் அதை நீங்கள் பார்த்தீர்களா அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் மற்றும் காவலர்களிடையே செல்போனில் ஏசி வீடியோ எடுத்தார்.
அப்போது ஏ ஆர் ஓட்டுநர் அனைத்தையும் கூறுங்கள் எனக் கூறி ஆவேசம் அடைந்தார் மேலும் ஒரு கட்டத்தில் நாங்கள் என்ன அடிமையா, எங்களை சாப்பிட்டீர்களா என்று ஒரு வார்த்தை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா, இன்று சுதந்திர தினம் தானே இன்று சுதந்திரமாக இருக்க விடுங்கள் எங்களை ஏன் அடிமையாகவே வைத்திருக்கிறீர்கள், நான் டூட்டியில் முறையாக தொப்பி மற்றும் காலணி சீருடைகள் அணிந்து தான் இருக்கிறேன், கொசுவலை பயன்படுத்தியது தவறா எனக் கேள்வி எழுப்பினார், மேலும் என்னை பற்றி பேசுங்கள் எதற்காக என் தாயை தந்தையை தவறாக பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார், மேலும் என்னை நீங்கள் இதுபோன்று சித்தரித்தால் நான் உங்கள் வேலையும் காலி செய்வேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தற்போது இந்த காணொளி காட்சி வைரலாகி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments