திருச்சியில், போலீஸ் உயர் அதிகாரிகள் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு மைக் மூலம் கொடுக்கும் அறிவுறுத்தல்களும், முக்கியமான பணிகளும் சமீப காலமாக சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஓபன் மைக்கில் பேசிய ஆடியோ தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் காவல் நிலையங்களில் பணிபுரியக்கூடிய காவலர்களுக்கு வார விடுமுறை கொடுக்க வேண்டும். ஆனால் ஒரு சில காவல் நிலையத்தில் அது போல் விடுமுறை அளிக்கப்படுவது இல்லை. முக்கியமான பந்தோபஸ்து முக்கியமான பணிகள் இல்லாத நேரத்தில் தாராளமாக விடுப்பு தரலாம். தேவையான அளவு காவலர்கள் இருந்தும் சில காவல் நிலையங்களில் விடுப்பு தருவதில்லை.
வார விடுமுறை காவலர்கள் கேட்கும்போது சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கண்டிப்பாக அனைத்து காவல் நிலையங்களிலும் அளிக்க வேண்டும். மேலும் இரவு நேர ரோந்து பணி செல்லும் பொழுது கையில் துப்பாக்கியுடன் செல்லலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கமிஷனர் பேசிய போது திருச்சி மாநகரில் போக்குவரத்து பிரிவு உதவி ஆணையர் முகமது ரபியிடம் பேசியபோது மைக் 27…. பாதி
ஆயுதப்படை வேலையும்
நான் எடுத்துகிறேன்.நான் சேர்த்து பார்க்கிறேன்.
Adc Ar இல்லாததால் உங்களை போட்டு இருக்கேன் சீக்கிரமா வந்து வேலை பார்த்த என்ன மைக் 27 என திருச்சி மாநகர ஆணையர் காமினி கடுமையாக வறுத்தெடுக்க ஆரம்பித்தார்.இரவு பணியில் இருக்கும் நேரம் தவிர சீக்கிரமாக வந்து பணியை பார்க்க வேண்டும்.
ஒரு பணிக்கு அதிகாரி இல்லாத பொழுது அந்த வேலையையும் நீங்கள் தான் சேர்த்து செய்ய வேண்டும். நீங்கள் சம்பளம் வாங்கவில்லையா அனைத்து வேலைகளையும் கமிஷனரே வந்து பார்க்க வேண்டுமா என்றும் அவரிடம் கடிந்து கொண்டார்.
இரவு நேர பணி இருந்தாலும் பணி நீங்கள் பார்த்து தான் ஆக வேண்டும் அதற்கு தானே சம்பளம் வாங்குகிறீர்கள் என என்று கடுமையாக பேசியுள்ளார்.
கூடுதல் பணி பார்த்து அலவன்ஸ் வாங்குகிறீங்க ல.
Ar dutyம் Traffic duty சேர்த்து தான் பார்க்க வேண்டும்.
U are get extra allowance incharge allowance இதலாம் சரியா இல்லா
இங்கே பணிக்கு வரும்பொழுது ஒரு மாதிரியாவும் வந்தவுடன் அஜந்தா பிக்ஸ் செய்து செயல்படுவதும் சரியல்ல.
இதற்கு முன்னர் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஓபன் மைக்கில் ஏற்கனவே இருந்த துணை ஆணையர்கள் சிலரை கடுமையாக
பேசியதாக போலீஸ் வட்டாரங்களில் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ் கமிஷனரின் ஆடியோ வெளியான விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் தடுக்க வேண்டும், என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments