திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி (06.01.2025) அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை,

மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர் சிவா நகர் , புத்தூர் ஆனந்தம் நகர், Rainbow நகர், தில்லைநகர், அண்ணாநகர், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யாகொண்டான் மலை, விஸ்வாஸ் நகர், மிளகுபாறை, கல்லாங்காடு, Society Colony, எம்.எம் நகர் மற்றும் தேவதானம், மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை,

ஜெகநாதபுரம், திருவறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் (07.01.2025) ஒருநாள் இருக்காது.

மறுநாள் (08.01.2025) அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           124
124                           
 
 
 
 
 
 
 
 

 04 January, 2025
 04 January, 2025





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments